Share on
ஏ.எல். ஜனூவர்
அம்பாரை மாவட்டத்தில் யானைகளின் தொல்லைகளிருந்து மக்களை பாதுகாக்க கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையி;ன் தலைமையிலான குழு இன்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர். உண்மை நிலைகளை அறிந்த அமைச்சர் 14 கிலோ மீற்றருக்கு யானை வேளிகளை அமைப்பதற்கான பணிப்புரைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கினார்.
அட்டாளசை;சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா அம்பாரை மாவட்ட வன விலங்கு பாதுகாப்பு உதவி காட்டிலதிகாரி டபிள்யூ. கீத்ஸ்ரீ மெவான், காட்டிலதிகாரி ஏ.எம். தர்மதாச ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ. இஸ்மாயில் உட்பட விவசாய பிரதி நிதிகளும் மக்கள் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் ஆலிம்சேனை, பாலமுனை பறடாக் குளம், ஆளம்குளம், சம்புநகர், தீகவாபி போன்ற கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் தலைமையிலான குழு யானைகளினால் இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கலந்தாலோசித்தனர்.
யானைகளின் தொல்லைகளினால் தாங்களும், தங்களது உடமைகளும், தங்களது உறவினர்களின் உயிர்களை இழந்து நிற்கும் தத்தளிக்கும் இவ் வேளையில் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அவர்கள் இப் பின்தங்கிய கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து வந்து 14 கிலோ மீற்றர் தூர யானை வேளி அமைப்பதற்காக பணிப்புரை வழங்கியமைக்கு இக் கிராம மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
ஏ.எல். ஜனூவர்
அம்பாரை மாவட்டத்தில் யானைகளின் தொல்லைகளிருந்து மக்களை பாதுகாக்க கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையி;ன் தலைமையிலான குழு இன்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர். உண்மை நிலைகளை அறிந்த அமைச்சர் 14 கிலோ மீற்றருக்கு யானை வேளிகளை அமைப்பதற்கான பணிப்புரைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கினார்.
அட்டாளசை;சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா அம்பாரை மாவட்ட வன விலங்கு பாதுகாப்பு உதவி காட்டிலதிகாரி டபிள்யூ. கீத்ஸ்ரீ மெவான், காட்டிலதிகாரி ஏ.எம். தர்மதாச ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ. இஸ்மாயில் உட்பட விவசாய பிரதி நிதிகளும் மக்கள் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் ஆலிம்சேனை, பாலமுனை பறடாக் குளம், ஆளம்குளம், சம்புநகர், தீகவாபி போன்ற கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் தலைமையிலான குழு யானைகளினால் இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கலந்தாலோசித்தனர்.
0 comments :
Post a Comment