லஞ்சம் பெற்ற கடுவல நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் கைது

Share on
கடுவல நகர சபையின் தொழிநுட்ப பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணியொன்றின் திட்டத்தை அனுமதிக்கவென வெலிபிள்ளேவ பகுதி வர்த்தகர் ஒருவரிடம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை குறித்த அதிகாரி லஞ்சமாக கேட்டுள்ளார்.

இது குறித்து காணி உரிமையாளர் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி குறித்த லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டபோது தொழிநுட்ப அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கடுவல நகரசபையின் அத்துருகிரிய கிளையில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான தொழிநுட்ப அதிகாரி கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :