கார்த்திகை தீபமேற்றல் இம்முறை இந்துக்களுக்கு தடை

Share on
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27ம் திகதியன்றே இம்முறை குமாராலய தீபமும் வருவதால்தான் இந்த தலையீட்டையும் தடைகளையும் இந்துக்கள் எதிர்நோக்குவதாக அவர் கூறுகின்றார். 

குமாராலய தீப நாளிலும் அதனை அடுத்த சர்வாலய தீப நாளிலும் இந்துக்கள் தமது வீடுகளில் தீபம் ஏற்றுதல் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடு செய்தல் வழக்கம். 

இம்முறை அவற்றைத் தடுக்கும் வகையில் இராணுவத்தினராலும் காவல் துறையினராலும் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து தனது கவனத்திறகு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 

மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி காவல் துறை துணை மா அதிபர் ஆகியோரை சந்தித்து நேரில் முறைப்பாடு செய்ய திங்கட்கிழமை சென்றிருந்த போதிலும சந்திக்க முடியாத நிலையில் எழுத்து மூலம் அவர்களின் கவனத்திற்குதான் தெரியபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தடை என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்திருந்தனர். 

(பீபீசி) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :