கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிறந்த பாடகர் போட்டியில் சிரேஸ்ட உத்தியோகத்தர்களில் தெரிவான சிறந்த பாடகர்களுள் ஒருவராக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கான விருதை இன்று(18) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வழங்கி வைத்தார்.
இவ் விருது வழங்கும் விழா இன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அங்கு வெற்றி பெற்ற அனைவருக்கும் விருதுகள் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.