பேருவளை பொலிஸ் பிரிவில் பொலிசார்- பொதுமக்கள் மோதல்; மின்ஷாத் முபாரக் ஹாஜியார் பொலிசாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்



J.f.காமிலா பேகம்-
பேருவளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட. நகரசபைக்கு முன்னால் உள்ள IOC எரிபொருள் நிலையத்தில் பொலிசார்- பொதுமக்கள் மோதல் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம் பெற்றுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்க இருப்பதாக சமூக ஊடகங்கள் ஊடாக தெரியவந்ததை அடுத்து, இலங்கையின் பல இடங்களிலும் உள்ள IOC நிலையத்திற்க்கு மக்கள் நள்ளிரவு முதல் வந்து,

வரிசையில் காத்திருக்கத்தொடங்கினர்.

பேருவளை IOC நிலையத்திலும் பலரும் வாகனங்களுடன் காத்திருந்தனர்.இவ்வாறு காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்குவதாக டோக்கனும் வழங்கப்பட்டிருந்தது.

திடீரென நேற்று பகல்நிலமை மாறி, புதிதாக ஒரு வரிசை பொலிசாரால் உருவாக்கப்பட்டு, அந்த வரிசையில் வந்த வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட்டது.ஏற்கனவே காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் இல்லை எனவும் வழங்கப்பட்ட டோக்கன் செல்லுபடியற்றது எனவும் பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டது.பின்னர் ஏமாற்றமடைந்த பலர், தாம் முந்தா நள்ளிரவு முதல் நேற்று மாலைவரை காத்திருந்ததாகவும் ,அத்தியாவசிய சேவை என்ற பெயரில் லஞ்சம் பெற்றுக்கொண்டு , புதியவரிசையை உருவாக்கி, புதிதாக வந்தவர்களுக்கு எரிபொருளை வழங்கியது முற்றிலும் முறை கேடானவிடயம் என பலர் பொலிசாரை கேள்வி கேட்டதையடுத்து கோபமடைந்த பொலிசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொதுமக்கள் துரத்தியடிக்கப்பட்டதுடன் பலர் தாக்குதலுக்கும் ஆளாகினர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பபட்ட ஒருவரான பேருவளை மின்ஷாத் முபாரக் ஹாஜியார் என்பவர் , "தன்னை சுமார் 8 பொலிசார் தாக்க முற்பட்டதுடன் தனது கழுத்தை நெறித்து தனது கையடக்கதொலைபேசி, 300000/-பெறுமதியான கைக்கடிகாரம் கார்சாவி போன்றவற்றை பொலிசார் பறிக்க முற்பட்டதாகவும்,பொதுமக்கள் அங்கே தன்னை காப்பாற்றி விடுவித்ததாகவும்" கூறினார்.இச்சம்பவத்தின் பின்

நடக்க முடியாது ,கண்கள் வீங்கிய நிலையில் தற்போது அவர் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பான காணொளி கீழே உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :