வாழைப்பழங்களின் விலை அம்பாறை மாவட்டத்தில் திடிரென சரிவு



பாறுக் ஷிஹான்-
டந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.

குறிப்பாக சம்மாந்துறை கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் கதலி வாழைப்பழம் கிலோ 150 ரூபாய் ,ஆணை வாழைப்பழம் 120 ரூபாய், செவ்வாழை பழம் 350 ரூபாய் ,சீனி கதலி 120 ரூபாய் , கப்பல் அல்லது கோழி சூடன் வாழைப்பழம் 280 ரூபாய், மொந்தன் வாழைப்பழம் 140 ரூபாய் ,இதரை வாழைப்பழம் 130 ரூபாய், உள்ளிட்ட வாழை பழ வகைகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 100 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம் தற்போது 150 ரூபாய் முதல் ரூபாய் 200 வரையில் விற்பனை செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் கதலி உள்ளிட்ட வாழைப்பழங்களுக்கான கேள்வி அதிகரித்து இருக்கின்ற நிலையில் சந்தைக்கு அதிகளவு கதலி உள்ளிட்ட வாழைப்பழங்கள் கொண்டு வரப்படுவதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான திடீர் சரிவை தொடர்ந்து சில வியாபாரிகள் பிஞ்சு வாழைக்குலைகளை மருந்தடித்து விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இம் மாவட்டத்தின் சில இடங்களில் தற்போது திருமணம் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளின் காலம்(சீசன்) ஆரம்பித்துள்ளமையால் வீடுகள் அலுவலக வாசல்களில் கட்டப்படும் குலையுடன் கூடிய கதலி வாழைகளின் விலையும் அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு சோடி வாழை குலை 2500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 4500 ரூபாய் தொடக்கம் 5000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

இதனைவிட இதரை வாழைப்பழம் கிலோ 200 ரூபாய்க்கும் கப்பல் வாழைப்பழம் 300 ரூபாய் தொடக்கம் 400 ரூபாய் வரையிலும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தம் மற்றும் உரப்பிரச்சினை எரிபொருள் உள்ளிட்ட ஏனைய காரணத்தினால் வாழை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே கடந்த காலத்தில் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தற்போது அந்நிலையில் இருந்து வாழைப்பழ செய்கையாளர்கள் மீண்டு அறுவடை அதிகரித்துள்ள நிலைமையே இந்த விலை சரிவிற்கு காரணம் என வாழைச் செய்கையாளர்கள் கூறுகின்றனர்.

இது தவிர கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளான மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கதலி வாழை, செவ்வாழை , இதரை வாழை ,கப்பல் வாழை, மொந்தன் வாழை ,அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :