முன்னாள் அரசாங்க அதிபரின் அறிக்கைக்கு எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதில்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் ஐயா அவர்களுக்கு முன்னாள் வட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எழுத்தாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபாவினால் மனம் திறந்த மடல்.

கடந்த வாரம் வசந்தம் தொலைக்காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கௌரவ இராசமாணிக்கம் சாணக்கியன் இருவருக்கும் இடையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சனை தொடர்பாக தெளிவுபடுத்தும் விவாதத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் தங்களால் முன்வைக்கப்பட்ட விமர்சன ரீதியான கருத்துக்களுக்கு ஒரு மனம்திறந்த தெளிவுபடுத்தலை தங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.

ஐயா நீங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக உயர் பதவியான அரசாங்க அதிபர் பதவியை வகித்த ஒரு சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம்.

கௌரவ ஹாபிஸ் நசீர் அவர்கள் தனது விவாத உரையின்போது பயன்படுத்திய சில சொல்லாடல்கள் தொடர்பில் ஐயா அவர்கள் சில வியாக்கியானம் ஆனதும் முரண்பாடு பட்டதும் ஆன பிழையான பொருள் கோடல்களை வழங்கி இருந்தது கவலையான விடயம் ஆக இருந்தது.

தாங்கள் இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபராக இருந்தவர் குறிப்பிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்த தலைப்பு தொடர்பில் தங்களுக்கும் தெளிவின்மை இருக்கிறதோ அல்லது வேண்டும் என்று தாங்கள் பிழையான ஒரு பொருள் கோடலை சொல்ல வருகிறீர்களோ என்று நான் உங்களை சந்தேகிக்கிறேன்.

ஐயா மட்டக்களப்பு மாவட்டம் சுமார் 2650 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது .
இம்மாவட்டத்தில் சுமார் 66 வீதம் இந்து மக்களும் சுமார் 28 வீதம் முஸ்லிம்களும் 06 வீதம் கிறிஸ்தவ மக்களும் வாழுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த காணி பரப்பில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்கள் தற்போது வெறும் 46 சதுர கிலோமீட்டர் காணிகளே நிர்வாக பரப்பில் உள்ளது. ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னுத்தி ஒன்பது ஆம் ஆண்டுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் முஸ்லிம் பிரதேச செயலகங்கள் கான காணி பகிர்ந்தளிப்பு 196 சதுர கிலோமீட்டர்கள் இருந்தது என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்து இருக்கிறீர்கள்.

எனினும் இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கான விகிதாசாரத்துக்கு ரிய காணி பகிர்ந்தளிப்பு தொடர்பில் 2000 ஆண்டு அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட " பனன் பலன" ஆணைக்குழு அதன் சிபார்சின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்கியதை தாங்கள் தெளிவாக அறிந்து இருந்தும் ஏன் அதனை மறைத்து பொய்யான கருத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சொல்ல முற்படுகிறார்கள்.

இதில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவு கோரளைப்பற்று தெற்கு எனப்படும் கிரான்

மற்றைய பிரதேச செயலாளர் பிரிவு கோறளைப்பற்று மத்தி எனப்படும் வாழைச்சேனை முஸ்லிம் பிரிவு .

இப் பிரதேச செயலாளர் பிரிவுகளை உருவாக்கும்போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவு 686 சதுர கிலோமீட்டர் பரப்பில் தோற்றுவிப்பதற்காக இணக்கம் காணப்பட்டு அதற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தில் இருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை இழந்து விட்டுக் கொடுத்தனர். இன்றுவரை வந்தா 5 கிராம சேவகர் பிரிவுகளும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டிருக்கிறது என்பதை தாங்கள் அறிந்திருந்தும் ஏன் மறைக்கிறீர்கள் மக்களுக்கு சொல்வதற்கு மறுக்கிறீர்கள்.

அதேபோன்று கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை முஸ்லிம் பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த புனானை கிழக்கு உள்ளடங்கலான கிராம சேவகர் பிரிவு உடன் சேர்த்து 240 சதுர கிலோமீட்டர் காணியை நிர்வாக பரப்பாக நிர்ணயித்திருந்தனர்.

இப்பிரேரணை அமைச்சரவைக்கு ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுமதி சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு பின்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு செயலாளரின் அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனை இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்ட நீங்கள் நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை ஆனால் தாங்களும் தாங்களுக்கு முன்பிருந்த அரசாங்க அதிபர்களும் நடைமுறையில் திட்டமிட்டு வேண்டுமென்றே இருட்டடிப்பு நிறுவாக அநியாயம் ஒன்றினை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதாவது ஒரே ஆணைக்குழுவின் இரண்டு சிபாரிசுகள் சமூகத்துடனான விட்டுக்கொடுப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை அமைச்சு சரியாக நடைமுறைப் படுத்துமாறு தங்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா கிரான் பிரதேச செயலகத்தை சரியாக குறித்த பரப்புக்கு உருவாக்கி நடைமுறைப்படுத்த ஓட்டமாவடி பிரதேச செயலகத்திலிருந்து அதற்குரிய 5 கிராம சேவகர் பிரிவுகளையும் ஆணைக்குழு பரிந்துரைத்த வாறு பிரித்தெடுத்து கிராணுக்கு வழங்கி விட்டீர்கள் அது பிரச்சனை இல்லை அது உடன்பாடு கண்ட விடயம் அதனால் முஸ்லிம்கள் அதை ஏற்றுக் கொண்டனர் . தமது நிர்வாக பிரதேசத்தின் கீழிருந்த ஐந்து கிராமசேவகர் பிரிவுகளையும் கிரான் உருவாக்கத்திற்கு விட்டும் தந்தனர் அதற்கு சான்றாக அந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் வாகனேரி புனானை மேற்கு வடமுனை ஊத்துச்சேனை கல்லிச்சை ஆகியன கிராண் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் இன்றுவரை ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா

ஆனால் அதேநேரம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை உருவாக்கும் போது மட்டக்களப்பு மாவட்ட அரசு அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா வாழைச்சேனை மத்தி முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு ஆணைக்குழு பரிந்துரைத்த 240 சதுர கிலோ மீட்டருக்கு பதிலாக வெரும் 7 சதுர கிலோமீட்டர் பரப்பு மட்டுப்படுத்தி அமைச்சரவை தீர்மானத்திற்கும் அமைச்சின் அங்கீகாரத்திற்கு முரணாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தமை எந்த வகையில் நியாயம் எனக் கருதுகிறீர்கள். இங்கு உங்களுடைய அதிகார கபடத்தனத்தை எவ்வாறு கட்சிதமாக செய்துள்ளீர்கள் என்பதையாவது விளங்கிக் கொண்டீர்களா ஓட்டமாவடியில் இருந்து எடுக்கவேண்டிய 148 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய 5 கிராம சேவகர் பிரிவுகளையும் கிராணை உருவாக்க எடுத்துக்கொண்ட அதேநேரம் வாழைச்சேனை மத்தியை உருவாக்கும்போது வாகரையில் இருந்து பிரித்து கொடுக்க வேண்டிய புனானை கிழக்கு உட்பட்ட 230சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொடுக்காமல் திட்டமிட்டு மறைத்ததன் மூலம் தாங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு இருபக்க தீமையை செய்திருக்கிறீர்கள்.

அதில் ஒன்று ஏற்கனவே இருந்ததை சுரண்டிக் கொண்டது.

அதேபோன்று கொடுக்குமாறு சிபார்சு செய்ததையும் கொடுக்காமல் தடுத்து கொண்டது.

இந்த விவகாரத்தை கடந்த இருபத்தி இரண்டு வருடமாக இழுத்தடிப்பு செய்து இருக்கிறீர்கள் .

பணம் பலான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்த முனையும்போது மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இரட்டை வேடத்தை கையாளுகிறீர்கள் கிரான் பிரதேச செயலகத்தின் உருவாக்கத்திற்கு ஆணைக் குழுவின் சிபார்சினை சரி காணுகின்ற அதேவேளை வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் உருவாக்கத்தில் ஆணைக்குழு தவறு என்று சொல்கிறீர்கள். இது எந்த அடிப்படையில் பொருந்தும் சரி என்றால் இரண்டுக்கும் சரியாக அமைய வேண்டும் தவறு என்றால் இரண்டு பிரதேச செயலகங்களுக்கும் தவறாக அமைய வேண்டும் இதுதானே இயற்கையின் நியதி

நீங்கள் சொல்வதைப் போன்று ஆணைக்குழு தவறாக இருந்தால் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்ற கிரான் பிரதேச செயலகத்தை களைப்பு செய்வதற்கு உடன் படுகிறீர்களா என்று உங்களிடம் வினவுகிறேன்.

போன்று இந்த மாவட்டத்தில் உள்ள ஏனைய மூன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச செயலகங்களான ஓட்டமாவடி காத்தான்குடி ஏராவூர் போன்ற பிரதேச செயலகங்களின் வர்த்தமானி செய்யப்பட்ட காணிகளின் பரப்பளவில் வேண்டுமென்றே அத்துமீறி மற்றைய பிரதேச செயலகங்கள் சூறையாடுவதற்கு தாங்களும் தங்களுக்கு முன்பிருந்த மாவட்ட அரச நிர்வாகமும் கைகோர்த்து செயற்பட்டது.

விடயங்களை தெளிவான ஆவணங்கள் ஆதாரங்களை முன்வைத்து அன்றைய விவாதத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதற்கு முறையாக பதிலளிக்க முடியாமல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராஜ புத்திரன் சாணக்கியன் திணரியதையும் எல்லோரும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பொதுவாக நடுநிலையான மனிதாபிமான சிந்தனை உள்ள எந்தத் தமிழ் சகோதரனும் உங்களின் இவ்வாறான அநீதியை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் இவ்விடத்தில் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த அடிப்படையைத் தான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அவர்கள் மாவட்ட அரச நிர்வாகம் முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணியை களவாடியது. என்ற வார்த்தை பிரயோகத்தை செய்யத் தூண்டியது .

இவ்விடத்தில் களவு என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானதும் வியாக்கியானம் பொருள்கோடல் அடிப்படையில் இவ் வார்த்தை பிரயோகம் முறையற்றது என்பது போன்றும் தங்களுடைய ஆதங்கத்தை குறிப்பிட்டிருந்தீர்கள்.

தங்களின் பொருள்கோடல் இன் படி களவு என்பது ஒருவரின் உரிமையை இன்னொருவர் முறைகேடாக அபகரித்துக் கொள்ளுதல் என நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதன்படி முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கு சொந்தமான வர்த்தமானி செய்யப்பட்ட நிர்வாகத்திற்கு உரித்தாக பட்ட உரிமை யான காணிகளை அத்துமீறி தவறான வரைபடங்களை உருவாக்கி தங்கள் நிர்வாக எல்லைக்குள் அருகிலுள்ள தமிழ் பிரதேச செயலக பிரிவுகள் உள்ளடக்கி இருப்பது உங்களின் பொருள்கோடல் படியே களவு என்று சொல்லலாம் தானே.

இவ்விடயத்தை தான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் முறையான புள்ளிவிபரங்களோடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிய உயர் அரச அதிகாரிகளின் அனுசரணையோடு முஸ்லிம் பிரதேச செயலகங்கள் காணிகள் முறையற்று இன்னொரு பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுவதற்கு உடந்தை காட்டப்படுகிறது என்பதை குறிப்பிடும் விதமாகவே முஸ்லிம்களின் காணிகள் களவாடப்பட்டு இருக்கிறது என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார்.

இதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் இலங்கையின் வர்த்தமானி பிரகாரம் செய்யப்பட்ட பரப்பளவு அடிப்படையாகக் கொண்டே ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஒரு அரசாங்க அதிபர் கடமையாற்றிய நீங்கள் மறுதலிக்க முற்படுகின்றீர்களா என உங்களிடம் வினவுகிறேன்.

எனவே இம்மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகளை உளப்பூர்வமாக அறிந்து வைத்திருக்கும் உங்களைப் போன்ற அதிகாரிகளால் எவ்வாறு இப்படி செயல்பட முடிகிறது.

தங்களால் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு குற்றச்சாட்டு தான் தமிழ் அகராதியிலேயே இல்லாத அதிகார பயங்கரவாதம் எனும் வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டதை குறிப்பிட்டிருந்தீர்கள்.

பயங்கரவாதம் என்பது ஒரு சமூகத்திற்கு எதிராக அத்துமீறிய அடக்குமுறையை ஏதாவது ஒரு அடிப்படையில் பயன்படுத்துவதே ஆகும் அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் புலிகளினால் ஆயுதமுனையில் பயங்கரவாதம் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

அரசாங்கத்தினால் ஆயுதப் பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது அதிகார ரீதியான தங்களின் ஆதிக்கத்தை பிரயோகித்து பல்வேறுபட்ட வழிமுறைகளிலும் முஸ்லிம் மக்களுக்கு பலவிதமான அநீதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார தோரணை இன் படி நிகழ்த்தியது தங்களுக்குத் தெரியாதா

இதற்கு சான்றாக பல உதாரணங்களை முன்வைக்க முடியும்

குறிப்பாக வாகரை கிரான் போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படுகின்ற முஸ்லிம்களின் காணிகளுக்கு அவற்றுக்கான உரிமங்களை கோரி விண்ணப்பித்திருந்த பல ஆயிரம் முஸ்லிம் மக்களுக்கு இதுவரை காணிகளுக்கான ஆவணங்கள் வழங்கப்படாமல் இனரீதியாக அவர்கள் பழிவாங்கப்படுதல் உங்களுக்கு தெரியும் தானே.

இந்த மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய கிராமமாக இன்று வரை கள்ளிச்சைகிராமம் காணப்படுவதும் அது இன்றுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் புறக்கணிக்க பட்டிருப்பதும் அங்கு வெளியேற்றப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் தான்.

இதற்கும் கூட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் ஒரு புது விளக்கம் கொடுத்திருந்தார் அதாவது கள்ளிச்சைக் கிராமத்தில் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த அனைவரையும் ரிதித்தன்ன, ஜெயந்தியாய கிராமத்தில் றீலொக்கேட் செய்துவிட்டதாக சொல்லியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :