வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையிலிருந்து மீள, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தம்மால் முடிந்தளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக தேவைப்படும் டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நிய செலாவணி முகாமைத்துவம் காரணமாக டொலர் கையிருப்பு குறைந்துள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை பாரதூரமான நிலைமையாக மாறியுள்ளது.

டொலர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இலங்கை டொலர்களை அச்சிட முடியாது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கூடுதலான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்தால், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் சான்று உறுதிப்பத்திரங்கள் எதனையும் வெளியிட முடியாத நிலைமை ஏற்படும். இந் நிலைமையால், எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது போனால், முழு நாடும் ஸ்தம்பித்து போய்விடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :