"கோவிட்டுக்கு பின்னரான பாடசாலைகளை மீள்கட்டமைத்தல்" வேலைத்திட்டம் ஆரம்பம்.



நூருள் ஹுதா உமர்-
கொரோணாவினால் நாடு பாதிக்கப்பட்டு மீளவும் பாடசாலைகள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் நன்மை கருதி அம்பாறை மாவட்ட கைத்தொலைபேசி வர்த்தக சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான இக்ரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யூ. சத்தார் (இக்ரா ஜலால்) அவர்களின் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், கொரோணா பாதுகாப்பு அங்கிகள், பாடசாலைக்கு தேவையான எல்.ஈ.டி மின்விளக்குகள், பெயின்ட் என்பன வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/ அல் ஜலால் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைவுதீனின் தலைமையில் இடம்பெற்றது

இக்ரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யூ. சத்தாரின் (இக்ரா ஜலால்) எண்ணக் கருவில் உதித்த "கோவிட்டுக்கு பின்னரான பாடசாலைகளை மீள்கட்டமைத்தல்" வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது, இதன் தொடர்ச்சியாக முறையே பல பாடசாலைகள் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படவுள்ளது,

இந்நிகழ்வில் உரையாற்றிய இக்ரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யூ. சத்தார், முற்றுமுழுதாக தன்னுடைய நிறுவனத்தின் சொந்த நிதியைக் கொண்டு அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு சமூக ஆர்வலர்கள் விளையாட்டு கழகங்கள் ஆகியோரின் ஆலோசனையை கருத்திற்கொண்டு அந்த அந்த பாடசாலையின் சூழ்நிலைகளையும் அதன் தேவைகளை உணர்ந்து இத்திட்டம் எடுத்துச்செல்லப்படும். குறிப்பாக கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்தல், பாடசாலைகளுக்கான மின் விளக்குகளை சரி செய்தல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,

இன்னும் எதிர்காலத்தில் இணையவழி ஊடாக பாதுகாப்பான முறையில் கற்றல் மற்றும் கற்பித்தல் சம்பந்தமான கருத்தரங்குகளும் நடத்தப்படும், இத்திட்டமானது இன மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் எடுத்துச்செல்லப்படும் என்றார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் டி.கே.எம். சிராஜ், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம். உதுமாலெப்பை, பொது அமைப்புக்களின் பிரதானிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிளாஸ்டர் வி.கழக முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :