மக்கள் கவிமணி சி .வி. வேலுப்பிள்ளையின் 37 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு



நோட்டன் பிரிட்ஜ் -
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் மக்கள் கவிமணி என்று போற்றப்படுகின்ற இலக்கியவாதியுமான சி.வி. வேலுப்பிள்ளையின் 37ஆவது நினைவு தினம் இன்று 19ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஒவ்வொரு வருடமும் மக்கள் கவிமணி சி. வி வேலுப்பிள்ளையின் நினைவு தினம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அதற்கேற்பமடக்கும்புர தோட்டத்திலுள்ள சி.வி வேலுப்பிள்ளையின் சமாதியில் அன்னாருக்குஅஞ்சலி செலுத்தப்பட்டதோடு மடக்கும்புரை தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மக்கள் கவிமணி சி .வி வேலுப்பிள்ளையின் நினைவு தின உரைகள் மடக்கும்புர தோட்டத்தில் உள்ள அன்னாரின் சமாதி வளாகத்தில் இடம் பெற்றன.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் பிரதிப் பொதுச் செயலாளர் பி. கல்யாணகுமார், தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், உபதலைவர் சிவானந்தன், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் ரவிச்சந்திரன் , பிரதேச அமைப்பாளர்களான பாலுவண்ணன், கார்த்திக் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் முன்னணி என்பனவற்றை முக்கியஸ்தர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்பாளர்களும் இணைப்பாளர்களும் தொழிற்சங்க இயக்குனர்களும் தோட்டத் தலைவர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :