பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள்!



M.I.இர்ஷாத்-
நாட்டின் பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் நேற்று இரவு குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி பள்ளிவாசல் தொழுகையின் போது சுகாதார விதிமுறைகளுக்கமைய ஒரே நேரத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளிவாசல் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் தேவையற்ற முறையில் ஒன்றுகூடுவதை தவிர்த்து செயறபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பள்ளிவாசல்களுக்குள் பிரவேசிக்கும் போதும் பாதுகாப்பு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது உணவுப்பொருட்களை கொண்டுவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைலாகு செய்வதை தவிர்த்து செயற்படுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :