Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message


Headlines
Loading...
Admin-message

ரிஷாட்டின் வீட்டில் தீக்காயத்திற்கு ஆளாகிய மலையக சிறுமி மரணம்!

J.f.காமிலா பேகம்-

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிசெய்துவந்த 16 வயது சிறுமி தீக்காயங்களால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – பொறளை பொலிஸார் இந்த தகவலை உறுதிசெய்தனர்.

குறித்த சிறுமி இலக்கம் 410/16, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இல் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஸாட்டிற்கு சொந்தமான வீட்டில் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்துவந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் கடுமையான காயத்திற்குள்ளான சிறுமி கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73ஆம் இலக்க வார்ட் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்த நிலையிலேயே சிறுமி இன்று சிகிச்சைப் பலனின்னறி உயிரிழந்திருக்கின்றார்.

குறித்த சிறுமி ஹட்டன் அக்கரப்பத்தனையிலுள்ள டயகம மேற்கு 03ஆம் பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த இஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயது சிறுமி என்று தெரியவந்துள்ளது.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.