சாய்ந்தமருது மக்கள் வங்கியில் 5ஊழியர்களுக்கு கொரோனா! உடனடியாக கிளை மூடப்பட்டது:வாடிக்கையாளர்கள் அலைச்சல்.!



வி.ரி.சகாதேவராஜா-
சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து சாய்ந்தமருதுக்கிளைஉடனடியாக மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச்சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு முகாமையாளர் அறிவித்தல் விடுத்திருக்கிறார்.
ஏலவே காரைதீவு மக்கள்வங்கிக்கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டு இதுவரை மூடிக்கிடக்கின்றது.

அது அவ்வாறிருக்க அருகிலுள்ள சாய்ந்தமருதிலுள்ள மக்கள்வங்கிக்கிளை தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கல்முனை சம்மாந் துறை நிந்தவூர் பிரதேச கிளைகளுக்கு அலையவேண்டியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை(18) அங்கு சென்ற சுகாதாரத்துறையினர் முகாமையாளர் உள்ளிட்ட 15ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதன்பெறுபேறு நேற்றுமுன்தினம் (20) சனிக்கிழமை கிடைக்கப்பெற்றது. அதன்போது முகாமையாளர் உள்ளிட்ட 5பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஊழியர்கள் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :