கொவிட்-19 உம் பெண்களுக்கு எதிரான வன்முறையும்.



றாசிக் நபாயிஸ்-
கொவிட்-19 காரணமாக பல பாதிப்புகளை சமூகம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை காணப்படுவதை உணர்ந்த அம்பாரை மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமான கேப்ஸ்சோ அனுசரணையில்
கல்முனை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப்.சிபாயாவின் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதுயுத்தீன் தலைமையில் பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது.
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக சட்டத்தரணி சுதர்சினி மனோகரன் கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்தினார்.

இதன் போது கொவிட் -19ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியினர் யார்? வீடும் வீடு சார்ந்த பகுதியில் ஏற்படும் வீட்டு வன்முறை, வீட்டு வன்முறை ஏற்படுவதற்கான பிரதான காரணம், 2005ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விளக்கம், சிறுவர்களுக்கு ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு கையாண்டு முறையிடுவது மற்றும் வீட்டு வன்முறையில் அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :