எனது வாழ்நாளில் நான்செய்த மிகப்பெரியசத்திரசிகிச்சை ஒருமரத்தின்கீழ்தான்! RDHS டொக்டர் சுகுணன்

காரைதீவு சகா-

ளம் குறைந்த இடங்களிலிருந்துதான் பெரியபெரிய சாதனைகள் புரட்சிகள் உருவாக்கப்படுகின்றன. எனது வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய சத்திரசிகிச்சை ஒரு மரத்தின் கீழாகும். அதுபோல இன்று இந்தத்தோப்பில் உதயமாகும் இந்த முதல் வாரமின்னிதழ் கல்முனையின் அடையாளமாக ஆவணமாக மிளிரவேண்டும் பல தடங்களைப்பதித்து வீறுநடைபோடவேண்டும்.
இவ்வாறு கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் கல்முனைநெற் மின்னிதழை ஆரம்பித்துவைத்துரையாற்றுகையில் வாழ்த்தினார்.

தமிழர்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைநாளில் கல்முனை நெற் ஊடகவலையமைப்பினால் வாராந்த மின்னிதழ் பத்திரிகையொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஊடகவலையமைப்பின் ஸ்தாபகர் பு.கேதீஸ் வரவேற்புரை நிகழ்த்த மின்னிதழின் பிரதமஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் அங்குரார்ப்பணநிகழ்வு தம்பலவத்தை ஜீவாதென்னந்தோப்பில் மனோரம்மியமான சூழலில் நடைபெற்றது.

நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் தினகரன் முன்னாள் பத்திராதிபர் க.குணராசா கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஊடகவலையமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துசிறப்பித்தனர்.

அங்கு பணிப்பாளர் டொக்டர் சுகுணன் மேலும் உரையாற்றுகையில்:
உயிருக்கு நிகரான தமிழால் இணைந்தவர்கள் நாங்கள். அந்த சுந்தரத்தமிழில் தடம்பதிக்கும் நவீன இலத்திரனியல் யுகத்திற்கு பொருத்தமான இந்த மின்னிதழ் பலதடங்களைப்பதித்து அச்சுருவாகி எமது கரங்களில் தவழவேண்டும். மேலும் சிங்களம் அல்லது ஆங்கிலமொழியிலும் வெளிவரவேண்டும்.
ஊடகப்பணி என்பது கம்பியில் நடப்பது போன்றது. அது வரமா சாபமா என்றநிலையில் பயணிப்பது. நான் வைத்தியஅதிகாரியாக பெருமைப்படும் அதேவேளை ஓர் ஊடகவியலாளனாக அல்லது ஆசிரியராக வந்திருக்கவேண்டுமென உருவகப்படுத்திப்பார்ப்பதுண்டு.

இனமதபிரதேச வேறுபாடில்லாமல் பத்திரிகாதர்மம் நடுநிலைமை தவறாது எமது எண்ணம் நோக்கம் இம்மின்னிதழில் பிரதிபலிக்கவேண்டும். சிறந்த ஆசிரியர்குழாம் நல்லதொரு பணிப்பாளர் குழாம்.எனவே இக்கொழுக்கட்டை மிகவும் ருசியாக சிறப்பாக இருக்குமென்பதில்சந்தேகமில்லை. வீறுகொண்டு வெற்றிநடை போட வாழ்த்துகிறேன் என்றார்.
சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் தினகரன் முன்னாள் பத்திராதிபர் க.குணராசா கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.
பணிப்பாளர்சபை உறுப்பினர் பரம.சந்திரமோகன் நன்றியுரையாற்றினார்.

அதேவேளை அந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த இரண்டு மூத்தஊடகவியாளர் கல்முனை நெற் ஊடகவலையமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர். தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் க.குணராசா மற்றும் மின்னிதழின் பிரதமஆசிரியருமான சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோருக்கு கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிவரஞ்சித் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட இயக்குனர்குழு பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :