சட்டவிரோத கட்டடnஅமைப்பைத் தடுக்கச் சென்ற தவிசாளர் உறுப்பினர் கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல்! பிரச்சினை நீதிமன்றம் சென்றது!

வி.ரி.சகாதேவராஜா-

காணி நிரப்பியமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் அதே காணியில் கொட்டகை அமைக்க முற்பட்டவேளையில் அதைத்தடுக்கச்சென்ற பொலிசார் பொதுமக்கள் முன்னிலையில் தவிசாளர் உறுப்பினர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தருக்கு அவமானப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு எல்லைக்குள் உள்ள வயல்காணியில் சட்டவிரோதமாக தகரக்கொட்டகை அமைக்கப்படுவது தொடர்பாக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் கமநலஉத்தியோகத்தர் ஆகியோர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சசிக்குமாரும் சென்றுள்ளார்.

அவர்கள் அங்கு கொட்டகையை அவதானித்துக்கொண்டிருக்கையில் பொலிசாருக்கும் தவிசாளர் தகவல்கொடுக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். அதுவரை கொட்டகை அமைத்த உதவி தவிசாளர் ஏ.எம்.யாகீர் அங்கு வரவில்லை பொதுமக்களும் கூடினர்.

சிறிதுநேரத்தில் அங்குவந்த அவர் ஆக்ரோசமாக அங்கு நின்றவர்களுக்கு ஏசினார்.அங்கு பதட்டம் நிலவியது.

இது பற்றி தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்:

சட்டவிரோதமாக தகரக்கொட்டகை அமைக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கமநல உத்தியோகத்தர் ஆகியோர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க நான் அங்கு சென்றேன். பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சசிக்குமாரும் வந்தார்.

சிறிதுநேரத்தில் அங்குவந்த காணிஉரிமையாளரும் பிரதேசசபை உபதவிசாளருமான யாகீர் ஆக்ரோசமாக அங்கு நின்றவர்களுக்கு ஏசினார்.
இங்கு கிராமசேவை உத்தியோகத்தருக்கோ உறுப்பினருக்கோ தவிசாளருக்கோ எந்த அதிகாரமுமில்லை. எனது காணிக்குள் கால்வைத்தால் கொத்துவன் என்று மிரட்டினார். கிராமசேவையாளர் இனவாதி. உறுப்பினருக்கு இங்கு வேலையில்லை. செய்யிறதைச்செய்யுங்கள்.

மக்கள் தலைவனான என்னை பொலிசார் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதோடு எமது கடமையைச்செய்யவிடாம் தடுத்ததுடன் கொத்துவன் என்று அச்சுறுத்தல் விடுத்தமை குற்றமாகும். 
மற்றது கிராமசேவையாளரின் கடமைக்கு இடையுறு விழைவித்தார். எனவே நாம் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை பதிவுசெய்தோம்.

மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் இக்காணி உரிமையாளருக்கெதிராக கமநல உத்தியோத்தரால் போடப்பட்ட வழக்கை முன்நகர்வுமனுவை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு தாக்கல் செய்தோம்.
அதன்படி நேற்று(20) வழக்கு எடுக்கப்பட்டது. 

நாம் மன்றிற்குச் சென்றிருந்தோம். நீதிவான் சகலவற்றையும் கேட்டுக்கொண்டதன் பிற்பாடு இவ்விவகாரத்தில் தலையிட பிரதேசசபைக்கு அதிகாரமுள்ளது. எனவே அவரை(காணி உரிமையாளரை) எதிர்வரும் 28ஆம் திகதி மன்றிற்கு ஆஜராக அழைப்பாணை விடுப்பதாகக்கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :