ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் மீன்பிடி அமைச்சர் திலிப் வெதஆராச்சியின் மகன் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்தொன்றில் ஏற்பட்ட கைகலப்பினை அடிப்படையாக வைத்து அவர் கைதாகியிருப்பதா கூறப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் செலுத்திய கார் மற்றுமொரு காருடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரியவருகிறது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எவ்வாறாயினும் கைதாகிய குறித்த நபர் சில மணிநேரங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.