மத்திய அரசு முரட்டு பிடிவாதத்தை கைவிட்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்! எம்.கே. ஃபைஜி வலியுறுத்தல்!!



பி.எஸ்.ஐ. கனி-
புதுடெல்லி: மத்திய அரசு தனது முரட்டு பிடிவாதத்தை கைவிட்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்;

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், “இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாளுவதாக நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அவதானிப்பு மத்திய அரசின் ஆணவத்திற்கும், முரட்டு பிடிவாதத்திற்கும் கிடைத்த பலத்த அடியாகும். புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கவும், தலைநகரில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான களம் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் போதிய விவாதம் நடத்தாமல் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளை கடுமையாக பாதிப்பதோடு விவசாய உற்பத்தி சந்தையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கின்றன.

இந்த சட்டங்கள் விவசாயிகள் உற்பத்திச் செய்த பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்ணயித்த விலையில் விற்பதற்கு கட்டாயப்படுத்தும்.
ஆகவே, பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டங்களை ரத்துச் செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் நேர்மையான கோரிக்கைக்கு ஆக்கப்பூர்வமான பதிலை அளிப்பதற்கு பதிலாக, மத்திய அரசு முரட்டு பிடிவாதத்தையும், மூர்க்க குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
விவசாயிகளின் போராட்டம் 47 நாட்களை கடந்த பிறகும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு இன்னும் ஏளனம் செய்து வருகிறது.

எனவே மத்திய அரசு தனது ஆணவத்தையும், முரட்டு பிடிவாதத்தையும் கைவிட்டு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் எம்.கே.பைஜி வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :