Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

முஸ்லிம் தலைவர்களால் முடியாததை முயற்சித்த சிவில் அமைப்பினர். பாகிஸ்தானைவிட துருக்கி அதிபர் சக்திமிக்கவர் ?னாஸா எரிப்பினை தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்கும்பொருட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களுக்கு எமது புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்ற இரத்த உறவுகள் பலர் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றினை அனுப்பியதானது பாராட்டத்தக்கது.

பல தசாப்தங்களாக முஸ்லிம்களின் வாக்குகளை சூரையாடி, தங்கள் சுடும்பத்தினருடன் சுகபோகம் அனுபவித்து வருகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களினாலும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளினாலும் செய்ய முயற்சிக்காத ஒன்றை எமது புலம்பெயர்ந்து வாழ்கின்ற சிவில் அமைப்பினர் மேற்கொண்ட இந்த முயற்சிகள் போற்றத்தக்கது.

இந்த கோரிக்கையானது பாகிஸ்தான் பிரதமருடன் நின்றுவிடாமல் உலகின் சக்திமிக்க இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் காதுகளுக்கும் சென்றடையும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக கேணல் கடாபி, சதாம் ஹுசைன் ஆகியோர்களின் மறைவுக்குபின்பு இன்று உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களில் துருக்கி அதிபர் எடோர்கான் மிகவும் சக்தியுள்ளவராக விளங்குகின்றார்.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பின்போது, துருக்கிய அதிபர் எடோர்கான் அவர்களே முதன் முதலில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததுடன் மியன்மார் அரசினை எச்சரித்திருந்தார்.

அதன்பின்புதான் உலக இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களின் பார்வைகள் மியன்மார் நோக்கி திரும்பியதுடன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் அம்மக்களுக்காக உதவிசெய்ய முன்வந்தன.

இன்று உலகில் அமெரிக்க, ரஷ்ய இராணுவத்தினர் மேலாதிக்கம் செலுத்தி வருகின்ற இஸ்லாமிய மண்ணில் இரண்டு வல்லரசு படைகளுக்கு போட்டியாக தனது படைகளையும் துருக்கி நிலைநிறுத்தி வருகின்றது. அந்தவகையில் சிரியாவிலும், லிபியாவிலும் தனது படைகளை துருக்கி களத்தில் இறக்கியுள்ளது.

அத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அசார்பைஜான் - ஆர்மேனியா யுத்தத்தில், ஆமேர்னியாவின் கட்டுப்பாட்டில் இருந்த “நாகோர்னோ கராபக்” என்னும் நகரத்தை படை நடவடிக்கை மூலம் போர் செய்து மீட்டெடுப்பதற்கு தனது முழு உதவியையும் அசார்பைஜான் நாட்டுக்கு துருக்கி வழங்கியிருந்தது.

அதுமட்டுமல்லாது ஆபிரிக்கா உற்பட உலகில் பல பாகங்களிலும் துருக்கி தனது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுவதானது இழந்துபோன கிலாபத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக கருதப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களா ? அவ்வாறு வாழ்ந்தாலும் அவர்கள் அனைத்து உரிமைகளும் உள்ள சமூகமாக வாழ்கின்றார்களா ? என்ற எந்தவித அறிவும் உலகின் பலம் வாய்ந்த இஸ்லாமிய தலைவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனை தெரியப்படுத்துவதற்கும் எமக்கு அரசியல் தலைவர்கள் இல்லை. இருப்பவர்கள் அனைவரும் கடந்தகாலங்களில் தங்களது பதவிகளுக்காக ஒவ்வொரு ஆட்சியாளர்களின் எடுபிடிகளாகவே இருந்துள்ளார்கள்.

எனவே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது உறவுகள் சோர்வடைந்து விடாமல், தொடர்ந்து தங்களால் முடியுமானவகையில் உலகின் சக்திமிக்க இஸ்லாமிய தலைவர்களை அணுகி, அவர்கள் மூலமாவது ஜனாஸா எரிப்பை தடுத்தல் மற்றும் அதன்பின்பு வருகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை அடைய முயற்சிப்பது சிறந்தது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.