கம்பளையில் ஒரு பகுதி முடக்கம்



M.I.இர்ஷாத்-

ண்டி – கம்பளையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையளில் அங்குள்ள பகுதியொன்று முடக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பளை மில்லகாமுல பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதால் குறித்த பிரதேசம் அவதானம் நிறைந்த பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கொனட்டுவெவ கிராமம் இன்று (20) முதல் முடக்கப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த தொற்றாளர் உணவருந்தியதாக கூறப்படும் கம்பளை நகரில் ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் மாத்தளை லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கும் திங்கட்கிழமை இனம்காணப்பட்ட 36 வயதுடைய கொரோனா தொற்றாளரை மாரவில வைத்திய சாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :