புதிய செயற்திட்டத்திற்கான உடன்படிக்கை கைசாத்து

எம். எச். ஆஸாத் - பாலமுனை-


கொரிய சர்வதேச ஒத்துழழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் கோவிட்19 தொற்றில் இருந்து தோட்ட மற்றும் கிராம மக்களை காதார சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கான அவசரகால செயற்திட்டத்திற்கான உடன்படிக்கை 2020.09.24ம் திகதி நுவரெலியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சாலிக்க லிந்தகும்பர தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

இவ் உடன்படிக்கையானது யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாட்டிக்கான நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் கலாநிதி சானக்க தல்பஹேவா மற்றும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் இலங்கை நாட்டிக்கான பணிப்பாளர் யுவான் ஹவா காங் இடையில் உடன்படிக்கை கைசாத்திடப்பட்டது.

 இந்நிகழ்வுக்கு பிராந்திய சுகதார பணிப்பாளர் கொத்மலை நுவரெலியா பிரதேச செயலாளர்கள். நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி மாவட்ட விவசாய பணிப்பாளர் யூன் ஹெபிடாட் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம் அலீம் மற்றும் பிரதி திட்ட முகாமையாளர் சுஹைர் காரியப்பர் யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின் பால்நிலை சமநிலை சுற்றுசூழல் ஆலோசகர் தனுஐ தர்மசேன மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஆகியயோர் கலந்து சிறப்பித்தோடு இத்திட்டத்திற்கு பொறுப்பாக யூ.ன் ஹெபிடாட் நிறுவனத்தின் பிரதி திட்ட முகாமையாளர் எஸ்.எல்.அன்வர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இத்திட்டம் கொத்மலை நுவரெலியா பிரதேச செயலகப்பிரில் நடைமுறைப்படுத்த படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :