சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி



ஐ.எல்.எம் நாஸிம்-
னாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால தலைமைத்துவ பயிற்சி இன்று (14) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இப் பயிற்சி நெறியானது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி நியமனம் பெற்ற பட்டாதாரிகளுக்கு
பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார்துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில், சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படுள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதற்கமைய முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூன்றாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களிலும் நான்காவதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும் ஐந்தாவதாக தெரிவு செய்யப்பட பட்டதாரி பயிலுனர்களுக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்திலும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இப் பயிற்சி நெறியில் அரச ஊழியர்கள் பழகிக்கொள்ளவேண்டிய பழக்க வழக்கங்கள்,இலங்கை அரச ஊழியர்கள் பற்றிய விபரம், நேரமுகாமைத்துவம் ,போன்ற பல விரிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :