தமிழ் மக்களுக்கு சுமத்திரனைப்போல, முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற சட்ட ஆளுமை ஹமீட், இம்முறை பாராளுமன்றத்திலே இருக்க வேண்டும் -றிஷாட்


இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு சுமத்திரனைப்போல, முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற சட்ட ஆளுமை சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் இம்முறை பாராளுமன்றத்திலே இருக்க அம்பாறை மாவட்ட மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.


எஸ்.அஷ்ரப்கான்-
ந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு சுமத்திரனைப்போல, முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற சட்ட ஆளுமை சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் இம்முறை பாராளுமன்றத்திலே இருக்க அம்பாறை மாவட்ட மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று (02) இரவு அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,
சகோதரர் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் ஓர் ஆளுமையுள்ள அரசியல்வாதி பெருந்தலைவர் அஷ்ர போடு அரசியலை ஆரம்பித்தவர். அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் இன்று அரசியலில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இவரை வைத்திருப்பார்.

அமீர் அலியும், நானும் சகோதரர் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசை உருவாக்கிய பொழுது, இந்தக் காட்சிக்கான யாப்பை எழுதியவர் வை.எல்.எஸ். ஹமீட் ஆவார்.தன்னையே முழுமையாக அர்ப்பணித்து இந்தக் கட்சியுடைய உருவாக்கத்தில்
வை.எல்.எஸ். ஹமீடினுடைய பங்களிப்பை உண்மையிலேயே எங்களால் மறக்க முடியாது. இன்று இந்த கட்சி நாடு முழுக்க வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணமானவர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆவார்.
எதிர்வரும் இந்தப் பாராளுமன்றத்திலே எமது கட்சியில் 8 அல்லது 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு முழுக்க வெல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிலே வை.எல்.எஸ்.ஹமீடும் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் உங்களிடத்திலே அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

திகாமடுல்ல மாவட்டம் என்பது கல்வியலாளர்கள் நிறைந்த மாவட்டம். டாக்டர்கள், பொறியியலாளர்கள், சாதாரண மக்கள் அரசியலிலே முதிர்ச்சியானவர்கள் நிறைய உள்ள மாவட்டம். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பிறந்த, அரசியல் செய்த மாவட்டத்திலே ஆளுமையுள்ள ஒருவரை நீங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

நான் அடிக்கடி சொல்வதைப் போன்று இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கு சுமத்திரனைப்போல, முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்ற சட்ட ஆளுமை வை.எல்.எஸ்.ஹமீட் என்று நான் சொல்லியிருக்கின்றேன்.
நல்லாட்சிக்கான தேசிய இயக்கத்தின் செயலாளராக இருக்கின்ற நஜா முஹம்மட் அண்மையில் விட்ட அறிக்கையிலே சொல்லியிருக்கின்றார், அம்பாறை வட்ட மக்களே கல்விமான்களே உங்களிடத்திலே நாங்கள் கேட்கிறோம். எத்தனையோ கட்சியிலே எத்தனையோ வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் இந்த ஆளுமை,திறமை, அனுபவம், ஆற்றல், சமூக உணர்வு, கறை படியாத, துணிவுள்ள, ஒரு சிறந்த சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட் களத்திலே நிற்கிறார். எனவே அவருக்கு உங்களது வாக்குகளை வழங்குங்கள் என்று பகிரங்க அறிக்கை விட்டதை நான் பார்த்தேன்.
அதுபோன்றுதான், சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் அனீஸ் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர், அரசியல் துறையிலே ஒரு விரிவுரையாளராக இருக்கின்ற அவர் என்னிடத்திலே அடிக்கடி சொல்லுவார், அம்பாறை மாவட்ட மக்கள் இந்த சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் என்பவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களாக தர மாட்டார்களா ? என்று சொல்வார்.
இன்று கண்டியில் உள்ள நஜா முஹம்மட் வன்னியிலே உள்ள டாக்டர் அனீஸ் விரிவுரையாளர் என நாட்டிலே உள்ள எத்தனையோ அறிஞர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள் இந்த வை. எல்.எஸ். ஹமீட் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்று, எனவே அம்பாறை மாவட்ட மக்களே ஆணையை இவருக்கு வழங்குங்கள்.
கல்முனைக்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல, தேசிய ரீதியில் எமது சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒரு ஆற்றல் உள்ள சிறந்த அரசியல்வாதி தான் இந்த வை. எல். எஸ். ஹமீட் அவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கட்சிக்கு அவர் துரோகம் செய்யவில்லை. கட்சிதான் அவருக்கு உரிய இடத்தை கொடுக்க முடியாமல் போனதே தவிர அவர் கட்சிக்கு எந்த துரோகத்தையும் செய்யவில்லை.
இவரை முதன்மை வேட்பாளராக தந்ததினுடைய அர்த்தம் அவருடைய திறமையையும் அர்ப்பணிப்பையும் வைத்தேயாகும். கட்சியுடைய தலைமை நான் சொல்கிறேன், கட்சியின் மீது பாசம் உள்ளவர்கள் யாவரும் வை.எல்.எஸ்.ஹமீ டுக்கு வாக்களிக்க வேண்டும்.
சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கான குரலாகவே பாராளுமன்றத்தில் இருக்கிறார். அதுபோலவே சகோதரர் வை.எல். எஸ். ஹமீட் வெற்றி பெற்றால் நிச்சயமாக சிறுபான்மையினருக்குரிய குரலாக பாராளுமன்றத்திலே இருப்பார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் இந்த கட்சியை ஒவ்வொரு ஊருக்கும் அறிமுகப்படுத்தியவர், சம்மாந்துறை ஆக இருக்கலாம், ஒலுவிலாக இருக்கலாம் நற்பிட்டிமுனையாக இருக்கலாம், சென்றல்கேம்பாக இருக்கலாம், பொத்துவிலாக இருக்கலாம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை என்கின்ற அம்பாரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த ஊர்களுக்கும் இவர் கஷ்டப்பட்டு இந்த கட்சியை யாருமே இல்லாத பொழுது தன்னந்தனியாக நின்று வளர்த்தெடுத்தவர். இந்தக் காட்சியின் ஆணிவேராக இருக்கின்றவர். அவருடைய வெற்றி என்பது கட்சியின் வெற்றியாக நான் பார்க்கிறேன். அவரோடு இருந்த நான், அமீரலி நாங்கள் எல்லோரும் பாராளுமன்றத்திலே இருக்கிறோம். இந்தக் காட்சியை உருவாக்குவதில் எங்களை விட நிறைய அர்ப்பணிப்புகளை செய்த அவரும் இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
நான் தலைவராக இருந்தாலும், இந்த கட்சியின் யாப்பை எழுதுவதில், கட்சியைப் பதிவு செய்வதில் தன்னந்தனியாக நின்று செயற்பட்ட ஒருவர் இந்த ஹமீத் என்பதை நானோ அமிரலிலோ இந்த கட்சித் தொண்டர்களோ எவரும் மறக்க முடியாது
என்பதை மனதில் இருத்தி இம்முறை அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
கல்முனையில் ஒரு அரசியல்வாதி இருந்து கொண்டு தான் கல்முனையின் காவலன் என்றும் கல்முனையை பாதுகாக்க போகின்றேன் என்றும் கூறுகின்றார். கல்முனை மக்களே நீங்கள் தான் இருபது வருடமாக அவரை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறீர்களே தவிர, அவர் உங்களை பாதுகாக்கவில்லை. இந்த ஊருக்கு எதையும் செய்யவில்லை.
இந்த நாட்டிலே கொழும்பு தலை நகரம் போல, யாழ்ப்பாணம் தமிழ் மக்களுடைய தலை நகரம் போல, கல்முனை முஸ்லிம்களினுடைய தலை நகரம். இந்த தலை நகரத்தின் தலைவிதி தலைகீழாக கிடக்கிறது. இந்த தலைவிதியை மாற்றக் கூடியவர்தான் வை.எல்.எஸ். ஹமீட்.
எனவே, அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை நீங்கள் கொடுத்து இந்த கட்சிக்கு வழங்குகின்ற ஒரு கௌரவமாக, இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம்களைக் சிறுபான்மையாக கொண்ட மொனராகலை,
ஹம்பாந்தோட்டை போன்ற இந்த நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியாத இடங்களுக்கும் பேசக்கூடிய ஆற்றலுள்ள ஒருவரான வை.எல்.எஸ்.ஹமீடை வெல்ல செய்வதற்காக உங்களுடைய முழு அர்ப்பணிப்பையும் செய்யுங்கள் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :