வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் கவனத்திற்கு!


J.f.காமிலா பேகம்-
திர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோரின் கைகள் நன்கு சுத்தப்படுத்தப்படும் எனவும், பின்னர் வாக்குச் சாவடிக்கு வந்த பின்னரும் கைகள் சுத்தப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது, முடியுமெனில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களை கொண்டு வருமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.
அத்துடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், செல்லுபடியான ஆள் அடையாள அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை அல்லது மதத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அட்டைகள் இல்லாத நபர்கள், கிராம அலுவர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வாக்களிப்பதற்காக வழங்கப்படும் வாக்குச்சீட்டின் மேல் புறத்தில், கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை, கீழ் புறத்தில் விருப்பு இலக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதலில் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடியிட வேண்டும் எனவும், அதன் பின்னர் கீழ் உள்ள இலக்கங்களை தெரிவு செய்து தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விருப்பு வாக்குகளை வழங்கும் போது, ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்று வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வழங்க முடியும் எனவும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவதற்கு முன்னர் வேட்பாளர்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் என்ற போதிலும், ஒரு கட்சியை மாத்திரமே தெரிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரே கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது இருவர் அல்லது மூவருக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :