ஏன் மன்சூருக்கு வாக்களிக்க வேண்டும்!

1980 களில் பெருந்தலைவர் அஷ்ரஃபின் தனித்துவ அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டு, 1986 இல் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியலில் கட்சிப் போராளியாக உருவெடுத்த முன்னாள் பா.உ. எம்.ஐ.எம். மன்சூர் இன்று 34 வருடங்களைத் தாண்டிய கட்சி மாறாமல் ஒரே கொள்கையோடு கட்டம் கட்டமாக 2015 இல் எம்.பி. பதவிக்கு வந்துள்ளார்.
இவருக்குரிய அரசியல் அங்கீகாரம் 1994 இல் கிடைத்திருக்க வேண்டும். பீ.எஸ்சி. பட்டப்பிற்காக கல்கலைக்கழகம் சென்று உயர்கல்வியை 1989 இல் பங்கரவாதப் பிரச்சினை, முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இவைகளுக்காக தனது பட்டத்தைத் தொடர முடியாது தியாகம் செய்தவர். 1989 காலப்பகுதியில் இனத்துவ அரசியல் வட கிழக்கில் நிலைபெற்ற காலங்களில் அப்போதைய வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.வை.எம்.மன்சூர், முனாஸ் காரியப்பர் போன்றோர்களுடன் இணைந்து கட்சியை வளத்தெடுப்பதில் பாடுபட்டவர் இதனால் அப்போது தமிழ் ஆயுதக் குழுக்களினால் தேடப்பட்டவர் (இது இப்போதைய இளைஞர்களள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)
இக்கால கட்டத்தில் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து கட்சிக்கும், சமூகத்திற்கும் பாரிய தொண்டாற்றியவர். தான் வகித்து வந்த இன்று உயர் பதவில் இருந்திருக்க வேண்டிய சுங்க அதிகாரி பதவியை இராஜினாமாச் செய்து சமூகத்தைப் பாதுகாக்க முன்வந்தார்.
அதுமட்டுல்லாது 2000 இல் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களது மரணத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சீரழிந்த போது தோள்கொடுத்து சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸை நிலைநாட்டி இப்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைத் தலைவராக்குவதிலும், உறுதுணையாக இருப்பதிலும் மிக்க பலமாக இருந்தவர்கள்தான் எமது மன்சூர் முன்னாள் எம்.பி. அவர்கள். இது பலருக்கும் தெரியுமா ? எவரும் முன்வராத நிலையில் 2000 ஆம் ஆண்டில் சம்மாந்துறைத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக அரசியலில் அங்கீகாரம் பெற்றார் சேவையாற்றுவதற்காக.
2006 இல் சம்மாந்துறை பிரதேச சபையில் அமோக வெற்றிபெற்று தவிசாளரானார். இதன் மூலம் சம்மாந்துறையை பலவழிகளிலும் அபிவிருத்திகள் செய்தார்….
அந்தவகையில் – கிராமிய வீதிகள் தார் விதிகளாக மாற்றியமை, நகர்புறத்திலிருந்து கிராமப்புறததிற்கு திண்மக்கழிவு அகற்றும் பணிகள் மேற்கொண்டமை, வீதி அபிவிருத்திகள், தெரு இலாம்புகள் இடல், சகர சபைக்கான முன்மொழிவுகள், புதிய பிரதேச சபைக்கான கட்டடம் இவரது முன்மொழியப்பட்ட செயற்திட்டம், மக்களின் வரிப்பணத்திலிருந்து பல மில்லியன் ரூபா செலவில் அப்துல் மஜீத் மண்டமாக பெயர் மாற்றி புனரமைப்பு செய்யப்பட்டது, கல்லரிச்சல், கைகாட்டி சந்தி முதல் வங்களாவடி முதல் மஜீத் புரம் வரையிலான மணல் வீதிகள் தார் வீதிகளாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வி பின்னர் 2012 இல் இடம்பெற்ற மகாண சபைத்தேர்தலில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சரானார். இந்த அமைச்சின் மூலம்.. சம்மாந்துறை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைக்குப் பதிலாக மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தி தனியான கட்டிடம் அமைத்தல், பல கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி செய்தல், கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள், நிருவாக கட்டமைப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்துள்ளார்.
அதன் பின்னர் 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரானார். சம்மாந்துறையில் ஆடைத்தொழிற்சாலை, உயர் தொழிற்நுட்ப கல்வி நிறவனத்திற்கான நிரந்தரக் கட்டிடத்தில் நிர்மாணித்தல், கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்துறைகளிலும் அபிவிருத்திகளை செய்துள்ளார்.
பிரதேச சபை என்றாலும் மன்சூர்தான். மகாண சபை என்றாலும் மன்சூர்தான். பாராளுமன்றம் என்றாலும் மன்சூர்தான். எல்லாவற்றிலும் அவருக்குத்தான் ஆசை என அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் துணிவுகரமாக நின்றனால்தான் 34 வருடங்களுக்கும் மேலாக சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸின் நிலை பெற்றிருக்கக் காரணமென்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல.
சம்மாந்துறை மூலம் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை உணரச் செய்திருக்கின்றார். அத்துடன் படிப்பயாக பலருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியல் அங்கீகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கின்றார். இனிமேல் பிரதேச சபைக்கு இறங்குவாரா? விட்டுக் கொடுத்திருக்கின்றார். மாகாண சபைக்கு இறங்குவாரா விட்டுக் கொடுத்திருக்கின்றார். குறிப்பாக மர்ஹீம் முன்னாள் பா.உ. யூ.எல்.எம். முகைதீன் ஐ விட மு.கா அனுபவம் கூடியவர் மன்சூர் 1994இல் தனக்கதன சீட் வேண்டுமென்று போராடாமல் அவருக்காக விட்டுக் கொடுத்துள்ளார். 2001 இல் மர்ஹீம் அன்வர் இஸ்மாயில் விட மு.காங்கிரஸின் அனுபவம் கூடியவர்தான் மன்சூர் எம்.பி. திருவுளச் சீட்டில் தனக்கு இடம் கிடைத்ததை ஊர் அறிந்தும் அவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஊர், பள்ளி நிருவாகம் எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவருக்காக விட்டுக் கொடுத்தார்.
2004 இல் ஏ.எம்.எம். நௌஷாத் (முன்னாள் பா.உ) அவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது தனக்கு மட்டும்தான் சீட் வேண்டுமென்று முனையாமல் தலைமைத்திற்கு மதிப்பளித்து தானும் தோல்வியடைந்திருந்தாலும் அவருக்கான விட்டுக் கொடுத்தார்.
அதே போன்று கிழக்கு மகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் அவர்களும் மு.கா. கட்சியுடன் இணைந்தமைக்காக மாகாண சபைக்கு மு.கா. உறுப்புரிமை வர வேண்டும். எனக்கருதி அவருக்கும் விட்டுக் கொடுத்தவர்தான் முன்னாள் எம்.பி. மன்சூர் என்பதனை மறந்து விடமுடியாது.
மன்சூர் எம்.பி. மிகவும் துணிச்சலாவர். சாதிப்பதில் வெறி கொண்டவர். தனது தைரியத்தால் எதையும் வெல்லக் கூடியவர். ஆளுமை நிறைந்தவர்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அவலங்களையும் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் எதிர்கொண்டுள்ள ஏமாற்றங்களையும் மிக ஆக்ரோஷமான முறையில் கர்ஜித்த மன்சூரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.
வெறும் திண்ணப் பேச்சு நடத்தும் முஸ்லிம் அரசியலிருந்து வேறுபட்டு மக்களுக்கான அரசியலை நடத்தும் சமூகப் போராளி. மாலைகளுக்கு மாத்திரம் கழுத்தை வளைத்துக் கொடுத்து மன மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் அரசியல்வாதியல்ல.
மன்சூர் எம்.பி. முஸ்லிம் சமூகத்தின் துடிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு போதும் பாராளுமன்ற கௌரவத்தை மாசுபடுத்தவில்லை. ஒரு போதும் கட்சி விட்டு கட்சி மாறவில்லை, ஒரு போதும் விலை போகவும் இல்லை.
மாமனிதர் அஷ்ரஃப் அவர்களுடன் ரணங்களையும் கணங்களையும் பங்கு போட்டுக் கொண்ட போராளி ஒருவனின் சமூகம் சார்ந்த உணர்வு, அதன் வெளிப்பாடுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை தெட்டத் தெளிவாக கடந்த கால பாராளுமன்ற அமர்வுகளில் சமூகத்திற்காக ஆக்ரோசமாக உரை நிகழ்த்தி வெளிக்காட்டியுள்ளார். முன்னாள் பா.உ.மன்சூர்.
தெளிவான குறிக்கோளுடன் ஒருவன் செயற்படும் போது அவன் நிச்சயமாக தொடை நடுங்கியாக இருக்கமாட்டான். துணிச்சலுடன் செயற்படுவான் என்பதனை கடந்த காலங்களில் மன்சூர் நிறுபித்துக் காட்டியுள்ளார்.
1986 இல் அரசியலில் காலூன்ற முஸ்லிம் சமூகத்திற்கான தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள முன்னாள் எம்.பி. மன்சூர் பலபோராட்டங்கள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் கட்சிக்காக 18 நீதிமன்ற வழக்குகளை சந்தித்தல் உள்ளிட்ட பலதையும் எதிர்கொண்டு அரசியல் மூலம் முஸ்லிம் சமூகத்திற்காக குறிப்பாக சம்மாந்துறை தாயின் உயர்வுக்காக தனது பட்டப்படிப்பு, சுங்கத் திணைக்களத்தின் உயர் பதவியையும் தியாகம் செய்துதான் அரசியலில் எதிர் நீச்சல் போட்டு இன்று வரை பயணிக்கின்றார்.
அறிவு, ஆற்றல்,ஆளுமை, போராட்ட குணம், யாருக்கும் பயமில்லாமல் தற்’துணிவு மனதில் பட்டத்தை நேரே பேசும் குணம், விமர்சணங்கள் ஆயிரம் வந்தாலும் தனக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதனை தைரியமாக செய்யும் வல்லமை, துணிச்சலுடன் பிரச்சினைகளை அணுகி ஆராயும் தன்மை, சவால்களைக் கண்டு பின்வாங்காத ஆளுமை, நிதானமும், ஆனுபவமும் கொண்ட ஆளுமைதான் முன்னாள் பா.உ.மன்சூர்.
எனவே, எதிர்வருகின்ற பாராளுமன்றம் பெரும்பான்மை ஆதிக்கவாதத்தை நிலைநிறுத்துகின்ற மத்திய மையமாக அமையவுள்ளதுடன், சிறுபான்மை மக்களுக்கு ஒரு சவாலான காலமாகவும் அமையவுள்ளது. அமையவுள்ள பாராளுமன்றத்தில் சமூகத்திற்காக பயமில்லாமல் தைரியமாக குரல் கொடுக்கக்கூடிய மன்சூர் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கு அம்பாறை மாவட்ட மக்களின் முதல் தெரிவாக மன்சூராக இருக்க வேண்டும்.
முன்னாள் எம்.பி. எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகயிருந்த கடந்த நான்கரை வருட காலத்தில் மக்களுக்கு ஆற்றிய முக்கியமான சேவைகள்.
1. செந்நெல் கிராமத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியில் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை தனியான கட்டிடம் நிர்மானம் – திறந்து வைக்கப்பட்டுள்ளது
2. கிழக்கு மாகாண சபையின் 8 கோடி ரூபாய் நிதியில் சம்மாந்துறை, வங்களாவடியில் ஆடைத் தொழிற்சாலை நிர்மாணம்.
3. யு.என்.டி.பி.யின் 2 கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறையில் விதை நெல் நிலையம் நிர்மாணம் – இது அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
4. உயர் கல்வி அமைச்சின் 450 மில்லியன் (45 கோடி) ரூபாய் நிதியில் சம்மாந்துறையில் மிக நீண்டகாலமாக தற்காலிய இடத்தில் இயங்கி வந்த உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் நிர்மாணம் – இந்நிறுவனம் 5 மாடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது – இது அம்பாறை மாவட்ட கரையோர மாணவர்களின் உயர் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
5. சம்மாந்துறை பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகளுக்கு அனுமதிப் பத்திரம், அளிப்பு உறுதிப்பத்திரம் என்பன வழங்குவதற்காக நில அளவைத் திணைக்களத்தின் பிராந்திய நில அளவைத் திணைக்களத்தின் காரியாலயம் சம்மாந்துறையில் திறந்து வைத்தல்.
6. கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதியில் சம்மாந்துறை வங்களாவடியில் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி நிலையம் நிர்மாணம் – இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
7. உள்ளுராட்சி, மகாண சபைகள் அமைச்சின் நிதியில் அம்பாறை மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலத் தேவையாக இருந்த விவசாய மற்றும் கிராமிய பாலங்கள் 5 பாலங்கள் நிர்மாணம். அந்த வகையில்
• 3 கோடி 50 இலட்ச ரூபாய் செலவில் சம்மாந்துறை பட்டம்பிட்டி – மல்கம்பிட்டி அணைக்கட்டின் குறுக்ககாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம்.
• 3 கோடி 50 இலட்ச ரூபாய் செலவில் மோறாவில் ஆற்றுக்கு குறக்காக உடையான்ட கட்டுப் பாலம்.
• 3 கோடி நிதியில் சம்மாந்துறை உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலம் .
• 3 கோடி 50 இலட்ச ரூபாய் செலவில் மல்வத்தை – மல்லிகைத்தீவு கிராமங்களை இணைக்கும் நேத்தலா புதுக்கண்ட (காத்தான்ட வட்டை) மாவடி இறக்கத்திற்கான பாலம்.
• சம்மாந்துறை கைகாட்டி “எஸ்” வாய்க்காலுக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம்.
இப்பாலங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆனால் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவில்லை
மேலும் வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம் உள்ளிட்ட பல்வெறு துறைகளிலும் கோடிக்கணக்கான நிதியின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :