இன்று தமிழரசுக்கட்சி கொடியவர்களின் கூடாரமாக மாறியுள்ளது: தேர்தலில் மஹிந்தவின்அரசாங்கம் வருவதையாராலும் தடுக்கமுடியாது!


கருணாவின் கூட்டத்தில் முன்னாள் த.அ.கட்சிஉறுப்பினர் ஏகாம்பரம் சூளுரை.
காரைதீவு நிருபர் சகா-
நான் 64வருடங்கள் அசையாத தமிழரசுக்கட்சிக்காரன். இன்று த.அ.கட்சி தடுமாறும் கட்சியாக மாறியுள்ளது. த.அ.கட்சி கூடாது என்று நான் சொல்லவில்லை. அது கொடியவர்களின் கூடாரமாக இன்று மாறியுள்ளது.அதைநம்பி இனி நாம் ஏமாறமுடியாது.

இவ்வாறு பாண்டிருப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் திகாமடுல்ல மாவட்டவேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் கருணா அம்மானை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் த.அ.கட்சியின் மூத்த உறுப்பினர்; எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

அன்று இ.த.அ.கட்சி சிறந்த தலைவர்களை கொண்டிருந்தது. ஆனால் கடந்த நான்கரை வருட காலத்துள் இன்றைய தலைவர்களால் அது சீரழிக்கப்பட்டுள்ளது.எம்மையெலாம் காட்டிக்கொடுத்து இன்று நக்குண்டு நாவிழந்த நிலையிலுள்ளனர். உரிமை சர்வதேசம் தேசியம் என்று உசுப்பேற்றுவார்கள். அவ்வளவுதான்.
வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கு இக்கட்சியால் எந்தப்பிரயோசனமும் இல்லை. இலங்கையிலுள்ள 25மாவட்டங்களில் அம்பாறை மாவட்ட நிலைமை வேறு. முஸ்லிம்களின் அடக்குமுறைக்கும் அடிமைப்படுத்தும் உட்பட்ட மாவட்டம். அதற்கு பிரதான காரணம் இக்கட்சிதான். அவர்கள் மு.காவோடு உறவாடுவார்கள். இங்கு மக்கள் பலவழிகளிலும் சுரண்டப்பட்டு சூறையாடப்படுவார்கள். அதையிட்டு அவர்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்.
கல்முனை தமிழ் பிரதேசசெயலக தரமுயர்த்தலைத் தடுத்தவர்களும் அவர்களே. கணககாளர் வருவார் என்று பேய்க்காட்டினார்கள். இவர்களது பொய்யையும் புளுடாவையும் நம்ப அம்பாறைத்தமிழர்கள் தயாரில்லை.
தேர்தல் வந்தால் மட்டும் ஈசல் போல வந்து செல்வார்கள். பின்னர் அடுத்த தேர்தலுக்குக் காணலாம்.மஹிந்த ஆட்சிவருவதை யாராலும் தடுக்கமுடியாது!
அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் உணரவேண்டும். இதுவே எமக்கான இறுதியான தேர்தல். இம்முறை வரப்போவது மஹிந்த அரசாங்கமே. அதனை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் 15வருட காலத்திற்கு மஹிந்தவின் ஆட்சி நிலைத்துநிற்கும். எனவே உரிமை தேசியம் என்று காலத்தை பாழாக்காமல் அம்மான் வழிநின்று இருப்பைக் காப்பாற்றுவோம்.
ஹக்கீம் கல்முனையில் தமிழர்களின் காணிகளை சுவீகரித்து நகரை அபிவிருத்தி செய்வோம் என்று தலைகீழாய் நின்றுபார்த்தார். இனவாதி ஹரீசும் துள்ளிக்குதித்தார். அதற்கெல்லாம் ஆப்புவைத்தது கருணா அம்மான்தான். இந்த த.அ.கட்சி சும்மா பார்த்துக்கொண்டிருந்தது.

எனவே இம்முறை அம்பாறை மாவட்ட தமிழர்கள் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும். செயல்வீரன் கருணா அம்மானைத் தெரிவுசெய்வதனூடாக நாம் எம்மையும் இருப்பையும் பாதுகாத்து அபிவிருத்திப் பாதையில் பயணிப்போம். இவரை விட வேறு மாற்றுவழி அம்பாறைத்தமிழர்களுக்குக்கிடையாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -