சிறிய நடுத்தர உற்பத்திகளை விற்பனை செய்ய சந்தை திறந்து வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் விற்பனைச்சந்தை நிகழ்வு நேற்று (27) சேருவில பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சேருவில பிரதேச செயலகம் அருகே நடைபெற்ற இவ் விற்பனைச்சந்தையை சேருவில பிரதேச செயலாளர் பி. ஆர். ஜயரத்ன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கொவிட்19 க்குப்பின்னர் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு படிமுறையாக இவ்விற்பனைச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.பிரளாநவன் தெரிவித்தார்.

கொவிட் 19 காரணமாக சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுடன் அவர்களை வலுப்படுத்த அரசாங்கம் பல கொள்கைசார் திட்டங்களை தயாரித்து செயற்படுத்தியும் தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்திட்டங்களை வழங்கியும் வருகின்றது.
மாவட்ட சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அண்மையில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் விசேட கலந்துரையாடல் துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்புடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -