இயங்கும் ஆறு சிறுவர் இல்லங்களுக்கு லட்ச ருபா பொதிகள்! ஜனாதிபதி கொரோனாசெயலணி அம்.இணைப்பாளர் பரமசிங்கம்.


காரைதீவு சகா-
கொரோனா பரவலுக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் ஆறு சிறுவர் இல்லங்களுக்கு அங்குள்ள சிறுவர்தொகைக்கேற்ப லட்ச ருபா பொதிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இவ்வாறு ஜனாதிபதி கொவிட்19 இல்லங்களுக்கான செயலணிக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வடிவேல் பரமசிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறுவர் முதியோர் மற்றும் பெண்கள்பாதுகாப்பு இல்லங்களின் பொறுப்பாளர்களுக்கான கூட்டமொன்று காரைதீவு பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி எம்.அசாருத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொரோனா தாக்கத்தின் பின்னரான இல்லங்களின் நிலைமைகள்? எதிர்காலத்தில் எவ்வாறு இல்லங்களை பராமரிக்கவேண்டும்? அவற்றைக்கண்காணிப்பது எப்படி? என்பது போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது.

அங்குரையாற்றிய இணைப்பாளர் பரமசிங்கம் மேலும் கூறியதாவது:கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல இல்லங்கள் செயலற்றுள்ளன. சிறுவர்கள் அவர்களது வீடுகளுக்குச்சென்றுள்ளனர்.

எனினும் ஆறு இல்லங்கள் தற்போதும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கிவருகின்றன. அவைகளுக்குரிய உணவு மருந்து ஏனைய தேவைகள் தொடர்பில் ஆராயவேண்டியுள்ளது.
அதற்காக யுஎஸ்.எய்ட் அமைப்பின் ஜடியா செயற்றிட்டத்தின்கீழ் பல உதவிகள் வழங்கப்படவுள்ளன. அதனை மனித எழுச்சி நிறுவனம் முன்கொண்டுசெல்லவிருக்கின்றது.

அது பின்வரும் நியதிக்கிணங்க வழங்கப்படவுள்ளது.
எட்டு பேருக்குக் குறைவான சிறுவர் இல்லங்களுக்கு இந்தப் பொதியைப் பெறும் வாய்ப்பில்லை.

ஆனால் 8தொடக்கம் 12 பேருள்ள இல்லங்களுக்கு 50ஆயிரம் ருபா பொதியும் 12தொடக்கம் 20பேர் வரையுள்ள இல்லங்களுக்கு 1லட்சருபா பெறுமதியான பொதியும் வழங்கப்படவுள்ளன.
அதேவேளை 20க்கு மேற்பட்டவர்களையுடைய இல்லங்களுக்கு 2லட்ச ருபா பெறுமதியான பொதிகள் வழங்கப்படும்.
இல்லங்களின் பொறுப்பாளர்களையும் சிவில்சமுக செயற்பாட்டாளர்களையும் இணைத்து எதிர்காலத்திட்டங்களை வரையவேண்டும்.

இந்தப்பொதிகளை மனித எழுச்சி நிறுவனம் வழங்கும்.அதன்இணைப்பாளர் எம்.நிஹால் இங்கு சமுகமளித்திருக்கிறார்.அவருக்கு நன்றிகள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -