தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் Dr Y.S.M Ziya அவர்கள் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை

தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்
Dr Y.S.M Ziya அவர்கள் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை

ஆதரவாளர்கள், அபிமானிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்

உலகளவில் இன்று ஏற்பட்டிருக்கும் #COVID_19 பரவலானது எமது வாழ்வையும் நாளாந்த செயற்பாடுகளையும் பாரியளவில் பாதித்துள்ளது. இந்நிலை அகன்று அனைவருக்கும் பாதுகாப்பான சூழலைப் பெற்றுக் கொடுக்க வல்ல இறைவன் துணை புரிவானாக! ஆமீன்.

தேசிய காங்கிரசின் அரசியல் பயணம் இத்தேசியத்தில் உன்னதமானதும் உயர்வானதுமாகும் என்பதுடன் இப்பயணமானது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததாகும். இதற்காக கட்சியின் தேசியத் தலைமை தன்னையே அர்ப்பணித்து இலங்கை அரசியலில் செயலாற்றி வருகின்றார் என்பதனை அரசியல் புலமைமிக்க மாற்றுக் கட்சியினரும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இங்கு, நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரசின் சார்பில் பாராளுமன்ற அதிகாரத்தினை உறுதிப்படுத்தி அதன் மூலமாக திருகோணமலை மாவட்ட மக்களுக்கு அரசியல் ரீதியில் பல்வேறான அபிவிருத்தித் திட்டங்களையும் இழக்கப்பட்ட அவர்களது உரிமைகள் தொடர்பிலான இடர்களையும் மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் தேசியத் தலைமை அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், கட்சியின் தேசியத் அமைப்பாளர் Dr.YSM.Ziya மற்றும் கட்சியின் உயர்நிலை உறுப்பினர்கள் ஆகியோர்களது பரந்துபட்ட ஆலோசனைக்கு அமைய தேசியக் காங்கிரஸ் தனது பிரத்தியேகச் சின்னத்தில் இப்பாராளுமன்றத் தேர்தலில் திருமலை உள்ளடங்களாக நாடுதழுவிய ரீதியிலும் களமிறங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் பலமிக்க ஏழுவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களது பெயர் விபரங்களைக் கொண்டதாக கட்சியின் தலைமை மற்றும் சட்ட ஆலோசகர் முன்னிலையில் வேட்புமனு தயாரிக்கப்பட்டது.

தயாரிக்கப்பட் வேட்புமனு நேற்று (19.03.2020) மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் எங்களது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என்ற செய்தி என்னை மாத்திரமல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து எமது பிரபல சட்ட ஆலோசகர் (சட்டத்தரணியின் பெயர் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது)

மூலமாக எமது கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் எழுத்து மூலம் கோரியிருக்கிறோம். அது தொடர்பிலான விளக்கம் எழுத்து மூலம் கிடைக்கப் பெற்றதும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (26.03.2020) மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை எமது சட்டத்தரணிகள் மூலமாக முன்னெடுக்க உள்ளோம் என்பதனை எமது ஆதரவாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.

இது விடயத்தில் எமது ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் அனைவரும் பொறுமை காக்குமாறு வேண்டுவதுடன் இப்பாராளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் காத்திரமான முன்னெடுப்பு தொடர்ந்தும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறேன்.

எமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிகார அரசியலின் வெற்றிடம் அகற்றப்பட்டு இம் மாவட்டத்தின் அரசியல் விடிவினை ஏற்படுத்துவதில் தன்னை அர்ப்பணிக்க தேசிய காங்கிரஸ் தயாராகவே உள்ளது என்ற செய்தியை தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -