இலங்கைக்கான ஓமான் நாட்டின் தூதுவர் அமீர் அஜ்வத் ஓமானில் வரவேற்கப்பட்டார்.

மான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெவ்வை அமீர் அஜ்வத் அவர்களுக்கு ஓமான் நாட்டு மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களால் ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அமைந்துள்ள அல் அலம் அரச மாளிகையில் இராஜரீக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மேதகு கோதாபாய ராஜபக்ஸ அவர்களால் வழங்கப்பட்ட தனது உத்தியோகபூர்வ நியமன ஆவணங்களை ஓமன் நாட்டு மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களிடம் கையளிக்கும் வைபவத்திலேயே இத்தகைய உயர் கௌரவம் வழங்கப்பட்டது.

தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் தனது பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் அவர்கள் சகிதம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து ஓமான் மன்னரின் அரச பாதுகாப்புப் படையின் (Royal Guard) தொடரணியில் அல் அலம் அரச மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுக்கு அரச பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓமான் நாட்டின் தீவான் அரச விவகாரங்களுக்கான அமைச்சர், ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர், அரச பாதுகாப்புப் படையின் கட்டளைத் தலமையதிகாரி மற்றும் அரச உபசரிப்புகளுக்கான தலமை அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஓமான் நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக் அவர்களைப் பிரத்தியேகமாகச் சந்தித்து உரையாடிய தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ அவர்களின் வாழ்த்துச் செய்தியை ஓமான் மன்னருக்குத் தெரிவித்ததுடன் இலங்கைக்கும் ஓமானுக்குமிடையே மிக நீண்ட காலமாக நிலவி வரும் இறுக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தனது திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை ஓமான் நாட்டுக்கு வரவேற்ற மேதகு மன்னர் ஹைதம் பின் தாரிக் அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வளர்ப்பதில் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதூவரின் பணி ஓமானில் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தூதுவர் அமீர் அஜ்வத் ஓமானுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற முன்னர் சிங்கப்பூர் மற்றும் புரூணை தாருஸ்ஸலாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானகராகவும் இலங்கை வெளி விவகார அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர வதிவிடத் தூதரகத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் உள்ள (UN Human Rights Council) ஆசிய நாடுகள் குழுவின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார். சவூதி அரேபியாவின் றியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இந்தியாவின் சென்னையிலுள்ள இலங்கைத் துனண உயர் ஸ்தானிகராலயத்திலும் இவர் உயர் இராஜதந்திர பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் மூத்த இராஜதந்திரியான இவர் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியும் (BA), கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமானி (LLB) மற்றும் சட்ட முதுமானி(LL.M) பட்டங்களையும் பெற்றுள்ளார். தூதுவர் அமீர்அஜ்வத் அவர்கள் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியும் மற்றும் நளீமியாவின் பட்டதாரியுமாவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -