மொட்டு சின்னத்தில் அதாஉல்லாஹ் அணியில் களமிறங்கும் மூன்று பெரும் புள்ளிகள்

பாராளுமன்றக் கலைப்பும் பொதுத்தேர்தல் பற்றிய விமர்சனங்கள் கலந்துரையாடல்கள், முன்னெடுப்புக்கள் என்று நடவடிக்கைகள் மும்முரமடைந்து வரும் இவ்வேளையில், ‘தேசிய காங்கிரஸ்’ தலைவரும் முன்னாள் அமைச்சரும், பொதுசன முன்னணியின் (SLPP ) அம்பாரை மாவட்ட அமைப்பாளருமான அதாவுல்லாஉற் அவர்கள் களநிலவரங்களை தீர்க்க ஆராய்ந்து, அலசியதன் முடிவாக, அம்பாரை மாவட்டத்தில் தே.கா. மூலம் மூன்று பிரதிநிதிகளை இம்முறை வென்றெடுப் பதற்கான காத்திரமான வியூகங்களை, மசூறாக்கள் மூலம் வகுத்து வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சாய்ந்த மருதில் தலைவிரித்தாடிய புதிய உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையை முற்படுத்தி உருவாகிய சூழல்களை மையப்படுத்தி அம்மண்ணின் கல்விமானும் DS ஆகவும் அமைச்சின் செயலாளராகவும் பதவிகள் வகித்த சலீம் சேர் அவர்களை களமிறக்குவதற்கான முடிவு ஏற்கனவே தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளையில், மு.கா.வின் கோட்டையாகவிருந்து ‘உறக்கீமின்’ இஸ்லாமிய அடிப்படைகளை மீறிய ‘முனாபிக்’ தனமான ஏமாற்று வித்தைகள், விவஸ்தையற்ற சந்தர்ப்பவாத முறைகேடான

அதிகார முன்னெடுப்புகளால் குழம்பி, வெந்து போயிருக்கும் அட்டாளைச்சேனையை இம்முக்கோண சதுரங்க போட்டி வியூகத்தில் உட்படுத்துவதற்கான காத்திமான யோசனையை தலைவர் அதாவுல்லாஉற் அவர்கள் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

அட்டாளைச்சேனை மண்ணின் 30வருட கால முகா போராளியும், உச்சபீட கல்வி கலாசார பணிப்பாளரும், நாடறிந்த கல்விமானும், இப்பிரதேச முதலாவது பல்கலைகழகப் பட்டதாரியும், UK ‘பிரட்போர்ட் சர்வலாசாலை’ யின் ‘சமாதானக் கற்கைத்’ துறையில் பட்டப் பின்படிப்பைக் கொண்டவருமான பழீல் BA, அவர்களை இப்பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கான முயற்சிகளும் அழுத்தங்களும் தற்போது வலுத்து வருகின்றன.

பழீல் BA, முன்னாள் ஜாமிஆ நழீமிய்யாவின் சிரேஷ்ட விரிவரையாளரும், இறைவரித் திணைக்கள அதிகாரியும், வங்கி முகாமையாளரும் பிரதம கண்காளரும், தென்கிழக்கு பல்கலையின் சி.உதவிப் பதிவாளரும் 2002ன் சமாதான ஒப்பந்த காலத்தில் ‘சிரான்’ சமாதான செயலகப் பணிப்பாளரும் அரசியல் பதவிகளோடு பல்துறை ஆற்றல் அனுபவங்களோடு சிறந்த நிர்வாகியுமான பழீல் BA சிறந்த மேடைப் பேச்சாற்றல் கொண்டவராவார்.

2012ல் நடைபெற்ற ‘மாகாண சபைத் தேர்தலில்’ உறக்கீமின் கழுத்தறுப்புக்கள், அவரின் அடாவடிகடிகளின் தில்லுமுல்லுகளிற்கிடையிலும், அட்டாளைச்சேனையில் அதிகூடுதலான வாக்குகளை பழீல் BA பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது ‘பொதுச் சேவை ஆணைக்குழு’ (PPSC ) வின் அங்கத்தவராக அவர் சேவையாற்றி வருகின்றார்.

‘நன்கு படித்த சமூக விரோத, ஊழல்களற்ற சேவை மனப்பான்மைகொண்ட ஒழுக்கமுள்ள தலைவர்களை பாராளுமன்றத் தேர்தலுக்கு இம்முறை களமிறக்க வேண்டுமென்ற’ ஜனாதிபதி கோட்டபாயாவின் கோட்பாடுகளுக் கேற்ப தலைவர் அதாவுல்லாவினால் இவ்வியூகம் வகுக்கப்படுகின்றது. தனது அரசியல் பயணத்தில் 2000மாம் ஆண்டிலுருந்து தமது அரசியல் உயர்ச்சி எழுச்சியில்.

இப்பிரதேசத்தில் ஏணிப்படிகளாக, முன்னணியில் நின்று செயற்பட்டவர்களில் ‘ பழீல் BA ஒரு படித்த பண்பான அரசியல் வாதி’ என தலைவர் அதாவுல்லாஉற் அடிக்கடி அவரை நினைத்து நன்றி பாராட்டுவதாக அட்டாளைச்சேனையின் தே கா. மத்திய குழுவினர் நேற்று முன்தினம் நடந்தேறிய பூர்வாங்க 1வது கலந்துரையாடலில் சிலாகித்துப் பேசினர்.

“ முகா தலைவர் உறக்கீம், தனது பிழையான இஸ்லாமிய விரோத சித்தாந்தங்களினால் முகாவையும் அதிலுள்ள படித்த பண்புள்ள, பழீல் BA போன்ற ஆரம்பகாலப் போராளிகளையும் ஓரங்கட்டி அழிக்க நினைத்தாலும், சமுதாயம் அதற்கு தொடர்ந்தும் துணைபோகாது” என்பதற்கு எதிர்வரும் பொதத் தேர்தல் ஒரு சாட்டையடியாக விழப் போகின்றதா?...... என மக்கள் நிதானமாக நடுநிலையாகச் சிந்திக்க, பேச முற்பட்டு வருவது யதார்த்தபூ;வமாக கிழக்குக் கரையெங்கும் மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -