பாராளுமன்றத்துக்காக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஹக்கீம்,றிஷாத், அதா உல்லாஹ்...

அபூ மபாஸ்-
லங்கை அரசியலில் பெருமாற்றங்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெளத்த கடும்போக்கர்களின் பிரச்சாரங்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வை மேலோங்கச் செய்யும் நிலை உருவாகி இருக்கின்றமை மட்டுமல்லாது அவ்வப்போது சில இடங்களில் சச்சரவுகளும் இடம்பெறுவதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம்.

இலங்கை அரசியலில் மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி கடந்த ஒரு தசாப்தம்  இருந்த வேளை அந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று பெரும் பான்மை மக்கள் தொடக்கம் சிறுபான்மை மக்கள் வரை களத்தில் இறங்கி செயற்பட்டு மகிந்த அரசுக்கு தோல்வியைக் கொடுத்தனர். ஆனால் மக்கள் எடுத்த முயற்சிக்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆட்சி மரத்தைச்சீவி முள்ளை வீட்டுக்குள் போட்ட நிலையாகவே அமைந்தது.
ஆட்சி வந்த வேகத்தில் மறைந்து ஓடியதை அனைவரும் கனவுகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அத்துடன் இரு பிரதான கட்சிகளிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் அதன் பிரதிபலிப்பே இன்று புதிதாக உருவாகி உயிர்பிழைத்துள்ளது பொதுஜன பெரமுன என்னும் மகிந்த ராஜபக்‌ஷவின் கட்சி. ஆனால் எதிர் கட்சியாக எதிர் கட்சி தலைவராக அதிக அனுகூலங்களை அனுபவித்து பழகிய ரணில் விக்ரம சிங்கவுக்கு கட்சியையோ கட்சியின் பதவி நிலைகளையோ விட்டுக் கொடுக்க முடியாத அசையாத ஆசை காரணமாகவே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியினால் தாமதமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சஜீத் பிரமதாசா தோல்வியடையும் நிலை ஏற்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் இன்று ரணில் விக்ரம சிங்க புதிய அறிவிப்பு ஒன்றினை விடுத்திருப்பது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தோளில் கைபோட்டுக்கொண்டு திரியும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு பெரும் தலையிடியாக இருப்பதனை அனைவராலும் பார்க்கக் கூடியதாகவே உள்ளது. அதுதான் ரணிலின் புதிய அறிவிப்பான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்ற அறிவிப்பாகும்.

எனவே இந்த அறிவிப்பானது ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து கண்டி மாவட்டம் தொடக்கம் இன்னும் பல மாவட்டங்களில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடியாகியுள்ளன. குறிப்பாக கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டி இடும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதுபோல் வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டி இடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு இவ்வறிப்பானது பெரும் சங்கடமான நிலையாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே இச்சந்தர்ப்பத்தில் குறித்த இருவருக்கும் ஏதுவாக அமைந்த மாவட்டமாக அம்பாரையையே தெரிவு செய்யக்கூடும் உதாரணம் முதல் ஒரு தடவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டமையைக் குறிப்பிடலாம். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் இப்படியான நெருக்கடியை சமாளிக்க சஜீத் பிரமதாசாவை தலைவராகப் பயன்படுத்தி இவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க கடும் முயற்சி மேற்கொள்ளவும் திட்டம் ஒருபக்கம் நடைபெற்றாலும் புதிய கட்சியைக் கொண்டு செல்ல இக்கால கட்டத்தில் சஜீத்தால் முடியாத காரியமாகவே அது பார்க்கப்படுகிறது.

ஆனால் எது எவ்வாறாயினும் தங்கள் சமூகத்தைக் காக்க சமூகத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் இருக்கத் தக்க முஸ்லீம் தலைமைகள் பிரதான கட்சிக்கு தலைவர் தேடுவதிலும் இருக்கும் தலைவரை பதவி விலக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை சமூகத்தின் மத்தியிலும் சமூக அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் கேள்விகளாக எழுகின்றமையை இவர்கள் அறிய வாய்ப்பில்லை. எனவே எது எப்போது எப்படி நடக்கின்றது பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் பதவிக்காக சமூகத்தின் விடியலை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மக்கள் உறுதியாய் இருத்தல் காலத்தின் கட்டாயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -