சஜித் பிரேமதாசவின் வெற்றி ஜனாதிபதி வெற்றிக் கிண்ணமும் வெற்றி பெறும் சந்தர்பமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் இரு கரங்களிலே தங்கி உள்ளது இம்ரான் மஹரூப்தெரிவிப்பு.

எப்.முபாரக்-
க்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் பிரதேச சபை நகர சபை பிரதிநிதிகளின் உதவியுடன் கடந்த காலங்களில் செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முடியுமான வரைக்கும் எமது மாவட்டத்தில் உள்ள மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களும் முன்னெடுத்து சென்றோம்.
தோப்பூரில் நேற்றைய தினம்(2) மாலை இடபெற்ற ஜனாதிபதி பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
கம்பெரலிய திட்டத்தின் ஊடக பல உட் கட்டமைப்பு வசதி நவின முறையில் மூன்று மாடி கட்டங்கள் பாடசாலைளுக்கு 20வருங்களுக்கு பின் இப் தோப்பூர் பிரதேசத்தை மையமாக கொண்டு செய்தோம் .
அத்தோடு எனது தகப்பன் எம் ஏ எச் மஹரூப் விட்ட வேலைத் திட்டத்தை இப் பிரதேசத்தில் இருந்தே நான் முன்னெடுத்து செல்லுகின்றேன் கடந்த காலங்களில் எனது தந்தையினால் நடப்பட்ட அடிக்கல் இன்று என்னை பல சேவைகளை உங்களுக்கு செய்ய துவங்க வைக்கின்றது .
எனது உதவி மற்றும் பிரதமரின் உதவியுடன் பிரதேச செயலகம் விரைவில் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் தௌபீக் பாரளுமன்ற உப்பினர் அப்துல்லா மஹரூப்பின் வேண்டுதலின் பின் துரித அபிவித்தி செய்யப்படும் எமது பிரதமரின் இரு கையையும் பலபடுத்துவத்துவன் மூலம் தான் எமது மாவட்டத்தை அபிவிருத்தியை எதிகாலத்தில் செய்யலாம் .
பெற்றோர்களே எனது போராளிகளே எனது தகப்பனின் போராளிகளே மறக்காமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
வெள்ளிக்கிழமை(1)குருநாகளில் எமது ஜனாதிபதி வேட்பாளர் மாநாட்டுக்கு செல்ல விடாமல் மீன் சாரத்தை நிருத்தி தடுத்தார்கள் பின்னனியில் மஹிந்த ராஜபக்சவே உள்ளார்.
அதற்கு பக்க பலமாக நகரசபை தலைவர் செயல்பட்டார் இன வாதத்தை பரப்பி சிகப்பு கொடி காட்டி தேர்தல் காலங்களில் நாட்டில் குழப்பங்களை தூண்டிவிட்டு இவர்கள் வாக்கு சேகரிக்க முயற்சி செய்கின்றனர்.
மக்களே சிந்தித்து செயற்படுங்கள் கோட்டாபய ராஜபக்சவின் கையில் ஆட்சி மாறுமாக இருந்தால் சிறுபான்மை பல துன்பங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -