இளம் வயதில் வெளிநாட்டு நிதி நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக உயர் பதவி




பி. முஹாஜிரீன்-
க்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் நிசார் றொஸ்லீன் அஹமட் அவுஸ்திரேலியாவின் உலகத் தரம் வாய்ந்த பீ.டபிள்யூ.சீ கணக்காய்வு நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
20 வயதை அண்மித்த இளம் பட்டயக் கணக்காளரான றொஸ்லீன் அஹமட் உலகப் புகழ்பெற்ற மேற்படி கணக்காய்வு நிறுவனத்தில் நிதித்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டமை மிகப்பெரும் சாதனையாகும். இளம் வயதில் இவ்வாறான சர்வதேச நிறுவனமொன்றில் ஒர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதானது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் 'பட்டயக் கணக்காளர்' கற்கை நெறியை இலங்கையில் மிக இள வயதில் (17 வயதில்) பூர்த்தி செய்தவராவார். இதன் மூலம் தனது தாய் நாட்டிற்கும் தனது கிராமத்திற்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவின் பிரபல்யமிக்க பல்கலைக்கழகமான தெற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் பெற்று (ஆயளவநச ழக Pசழகநளளழையெட யுஉஉழரவெiபெ) தொழில்துறைசார் கணக்கீட்டில் முதுமானி கற்கை நெறிக்காக அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஏ.ஆர். அப்துல் நிசார் - றிசானா தம்பதியரின் கனிஷ்ட புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -