புதிய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை அரவனைத்துக் கொண்டு சென்றால்தான் நாட்டினுடைய பொருளாதாரத்தை ஸ்திரமாக்க முடியும்_ அப்துல்லா மஃறூப் எம்.பி


ஹஸ்பர் ஏ ஹலீம்-
புதிய அரசாங்கமானது இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தை அரவனைத்துக் கொண்டு சென்றால் தான் பொருளாதாரத்ணை ஸ்திரமாக்க முடியும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
தம்பலகாம பிரதேச செயலகத்தில் நேற்று (27) மாலை விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில் சிறுபான்மை சமூகத்தை மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்காமல் நாட்டை சகஜமான முறையில் நிலையான சமாதானத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என இந்நாட்டு மக்களினுடைய எதிர்பார்ப்பாக உள்ளது .அண்மைய தேர்தலில் இருவர் முக்கியமாக போட்டியிட்டார்கள் இருவரும் தங்களது கொள்கைப் பிரகடனங்களை வெளிப்படுத்தியிருந்தார்கள் அதில் சஜீத் பிரேமதாச சிறுபான்மை சமூகத்தின் தமிழ், முஸ்லிம்,தோட்டத்தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து செயற்படுவதாகவும் மற்றொருவரான கோட்டபாய தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் பேசியிருந்த நிலையில் அவர் ஜனாதிபதியாக வெற்றி கொண்டார்கள்.
என்பது வீதமான சிறுபான்மையினர் சஜீதுக்கு வாக்களித்தார் பன்னிரன்டு வீதமே கோட்டாவுக்கு கிடைத்தது இதில் அண்ணளவாக ஆறு அரை இலட்சம் சஜீதுக்கு கிடைத்துள்ளது
இதில் சிறுபான்மையினரின் நம்பிக்கையை மக்கள் தேர்தலில் காட்டியுள்ளார்கள்.
கடந்த மூன்று நாட்களாக வீதிகளில் பாதுகாப்பு படையினர்கள் இறக்கப்பட்டுள்ளார்கள் இதனால் சிறுபான்மை மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் 704 ஊழியர்களும் இன்று 200 க்கும் மேற்பட்ட சுயாதீன ஆணைக்குழு அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறவிருந்த நிலையில் தடைகள் இடம் பெற்றுள்ளது இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக சுயமாக இயங்க வேண்டும் . வழங்கப்பட்ட அமைச்சுக்களில் 70 வீதமான அமைச்சுக்கள் மஹிந்த தரப்பில்தான் உள்ளது .

எனவே இந்த ஐந்து மாதத்துக்குள் சாதகமான நிலையை உருவாக்கி மக்களின் நம்பிக்கைக்கு உறுதிபூண்டவர்களாக நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -