Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

வெற்றியின் பங்காளர்களாக மாற எல்லோரும் மொட்டுவை ஆதரிப்போம் : முன்னாள் பிரதியமைச்சர் மையோன்.


நூருள் ஹுதா உமர்-
1999 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஐ.தே. க ஆதரவாளராக இருந்த நான் இன்று முதல் எமது மக்களின் நலன்கருதி எனது அரசியல் பாதையை மாற்ற தயாராகியுள்ளேன். பிரதி அமைச்சராக பதவி வகித்த எனக்கு நாட்டில் தலைதூக்கியுள்ள வெறுப்பு மனப்பான்மையை களைய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. பொருளாதாரம் சீரழிந்து நாடு பாதாளத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது இவற்றை சீர் செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். என முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம். முஸ்தபா (மையோன்) தெரிவித்தார்.
இன்று மாலை கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற சமகால அரசியல் மற்றும் தனது நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
கடந்த காலங்களில் மஹிந்த அரசில் எல்லா சுகபோகங்களையும் முஸ்லிம் தலைமைகள் அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் கட்சி மாறியது வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. அஷ்ரபின் மரணத்தின் பின்னர் மு.காவின் தலைவரான ஒருவர் இந்த சமூகத்துக்கு செய்தது ஒன்றுமில்லை. ரிசாத்தை சரியாக கௌரவித்து சகல உதவிகளையும் செய்து அவரை அபிவிருத்தி திட்டங்களின் நாயகனாக மாற்றிய அந்த ஆட்சி இறுதியில் துரோகிகளாக இவர்களை அடையாளப்படுத்தியது.
இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க கோட்டாவை ஆதரிப்போம் என்பதே எனது அழைப்பாகும்
என்னால் செய்யப்பட்ட சேவைகளை தவிர இதுவரை கல்முனையில் குறிப்பாக அம்பாரையில் நடந்ததாக எந்த சேவையும் தெரியவில்லை.
கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க சேவைகளை என்னால் செய்ய முடிந்தது மஹிந்த ராஜபக்ஷ அரசின் ஆட்சியிலேயாகும். அதனாளையே அவரோடு இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன்.
கோட்டாவுக்கு சிங்கள மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க முடிவெடுத்து விட்டார்கள் அந்த வெற்றியில் நாம் பங்காளராவோம். இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். மேலும் சாய்ந்தமருது கல்முனை உறவு கட்டியெழுப்பப்படல் வேண்டும் என்றார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.