ஓட்டமாவடி, மாஞ்சோலையில் கல்வீச்சு தாக்குதல் ஒருவருக்கு காயம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி - பதுரியா,மாஞ்சோலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காணி தொடர்பான முரண்பாட்டில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு (6) குறித்த பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மிக நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் காணி உரிமையாளர்களுக்கிடையில் காணி எல்லைப் பிரச்சினை இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு இரு குழுக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இரு சமூகத்தையும் மோதவிட்டு அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முயல்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு எமது காணிகளின் வேலிகள் தொடர்ந்தும் சிலரினால் சேதமாக்கப்படுவதினாலும், இப்பகுதியில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்கவும், இரு சமூக மக்களும் ஒற்றுமையோடு வாழ குறித்த பகுதியில் பாதுகாப்பு காவலரன் ஒன்றினை அமைக்கும் படி அப்பகுதி முஸ்லிம் தரப்பினர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த நபரொருவர் மீராவோடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின் வீடு சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -