கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு


எம்.என்.எம்.அப்ராஸ்-விசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப் போட்டிகள் நேற்று (05) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 12வயதின் கீழ் பிரிவின் பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட J.F. ஜெஸ்னா (100m ஓட்டம் - முதலாமிடம், 80m ஓட்டம் - இரண்டாமிடம் , 60m ஓட்டம் - இரண்டாமிடம்)
12வயதின் பிரிவின் ஆண்களுக்கான பந்து எறிதல் நிகழ்ச்சி, கோன்ஸ் சேகரித்தல் நிகழ்ச்சி போட்டியில் J.M. மாஹிஸ் என்ற மாணவன் முதலாமிடத்தையும், M.N. வலீத் 30m(wheel chair)ஓட்ட நிகழ்ச்சியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இம் மாணவர்களை நெறிப்படுத்திய பாடசாலையின் விசேட கல்விப் பிரிவு ஆசிரியைகளுக்கும் மேலதிக பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி பிரிவினருக்கும் மற்றும் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி இம்மாணவர்களை ஊக்குவித்து ஒத்துழைப்பு வழங்கிய மாண்வர்களின் பெற்றோர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ. எம்.ரசாக் மற்றும் , பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -