அமெரிக்காவுடன் இரகசிய கூட்டு வைத்திருப்பது ஐ.தே கட்சியா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவா- அமைச்சர் சாகல கேள்வி

மெரிக்காவுடன் இரகசிய கூட்டு வைத்திருப்பது ஐக்கிய தேசிய கட்சியா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவா என்று கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவுடன் ஐக்கிய தேசிய கட்சி இரகசிய கூட்டு வைத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சுமத்துகின்றனர். ஆனால் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார். இவ்வாறு பல சந்திப்புக்களை நடத்தி அவர்கள் தான் இரகசிய கூட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களிலேயே ஈடுபட்டுள்ளோம். யார் எவ்வாறு செயற்பட்டாலும் மக்களே இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் இவ்வாறான ஏமாற்று உத்திகளை கையான்டு மக்களை ஏமாற்ற முடியாது.

கட்சியில் வேட்பாளரை பெயரிடுவதற்கென முறையொன்றுள்ளது. நாம் அம் முறையினை பின்பற்றி வேட்பாளரை தெரிவு செய்வோம். அதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் அவருடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

தெனியாயவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிழவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.வீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -