Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

ஏறாவூர் பிரதேசத்தில் 121 முஸ்லிம் பொதுமக்கள் எல்ரீரீஈ யினரால் படுகொலை செய்யப்பட்ட 29 ஆவது ஆண்டு நினைவு


ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு - ஏறாவூர்ப்பிரதேசத்தில் 121 முஸ்லிம் பொதுமக்கள் எல்ரீரீஈ யினரால் படுகொலை செய்யப்பட்ட 29 ஆவது ஆண்டு நிறைவையொட்டி தியாகிகள் (ஷ{ஹதாக்கள்) நினைவு மார்க்க அனுஷ்டானங்களுடன் 12.08.2019 இரவு நடைபெற்றது.
ஷுஹதாக்கள் நினைவுப்பேரவையின் தலைவர் எம்எல்.அப்துல் லத்தீப் தலைமையில் ஏறாவூர்- மஸ்ஜிதுந்நூறுஸ்ஸலாம் பொதுமையவாடிப்பள்ளிவாயலில் நடைபெற்ற இந்த அனுஷ்டானத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம் அதையடுத்து விசேட பிரகடனம் என்பனவும் நடைபெற்றன.
1990 ஆகஸ்ட் 12 ஆந்திகதி இரவுவேளையில் ஏறாவூர்ப்பிரதேசத்தில் முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பிரதேசத்தின் கல்விமான் யூஎல் தாவூத், காதி நீதிபதி அப்துல் கபூர் மற்றும் தனவந்தர் அலிமுகம்மட் ஆகியோர் ஹஜ்ஜுப் பெருநாள் இரவு கடத்திக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கொலைகளை நினைவுகூர்ந்து அல்- குர்ஆன் பாராயணம் மற்றும் விசேட பிரார்த்தனை என்பனவும் நடைபெற்றதுடன் நினைவுரை நிகழ்வும் நடைபெற்றது.
பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், நகரசபை முதல்வர் ஐ. அப்துல் வாஸித் மற்றும் கல்விமான்கள் பலரும் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.

1985 ஆண்டு முதல் போர்ச்சூழலின்போது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான ஏழு அம்சங்களைக்கொண்ட பிரகடனத்தினை நினைவுப்பேரவையின் தலைவர் அப்துல் லத்தீப் வெளியிட்டார்.

1) 1990 ஆகஸ்ட் 12 ஆந்திகதியன்று ஒரேஇரவில் ஏறாவூர்ப்பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களது குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படவேண்டும்.
2) 1985 ஆம் ஆண்டுமுதல் போர்ச்சூழலின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட வன்முறைகளினால் சுமார் ஆறாயிரம் முஸ்லிம்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்காகவும் இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும்.

3) முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரத்தொழில், காணி, சொத்துக்கள் என பல்வேறு இழப்புக்களுக்கு முகங்கொடுத்த முஸ்லிம்களுக்கு உரிய நட்டஈடுகள் வழங்கப்படவேண்டும்.

4) அச்சமான சூழ்நிலையில் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் குறைந்த விலையில் முஸ்லிம்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வயற்காணிகளை மீள பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
5) வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்த்pன் வயற்பிரதேசங்களிலும் அழிக்கப்பட்ட இஸ்லாமிய மாக்க ஸ்தலங்கள் மற்றும் கிராமங்கள் என்பன மீளமைக்கப்படுவதுடன் இப்பிரதேசங்களில் முஸ்லிம்களை மீளக்குடியமரச்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
6) இனப்பிரச்சினைத்தீர்விற்காக உருவாக்கப்படும் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், சலுகைகள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.
7) எமது நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் வெறுப்பூட்டல்களை தடுத்து நிறுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஆகிய விடயங்கள் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.