கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் மூன்று முக்கியகோரிக்கைகளை முன் வைத்து இன்று மாலை 4 மணிமுதல் 48 மணித்தியாலங்கள் சேவையிலிருந்து விலகி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்தவருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதிமுதல் 27ஆம் திகதிவரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து அரசினால் கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவைக்கு சிலபரிந்துரைகளை முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து அமைச்சரவை இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.
அரசாங்கம் தமது அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் செவிசாய்க்காவிடின் பிறிதொருநாளில் அனைத்து ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கும் தயாராகவுள்ளதாக ஒன்றிணைந்ததபால் தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சங்கத்தின் உறுப்பினர் சிந்தக பண்டார மற்றும் ரஜீவ் ஆகியோரின் குரல் பதிவுகள் இருக்கின்றன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -