கல்முனை சாகிரா கல்லூரியை கட்டியெழுப்ப அறைகூவல் விடுக்கும் சோஷியல் வெல்பெயார் போரம்!

ல்முனை சாஹிரா கல்லூரியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை உடன் நிவர்த்திக்கக்கோரி சாய்ந்தமருது சோஷியல் வெல்பெயார் போரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்முனை சாகிரா கல்லூரி, இப் பிரதேச வாழ் முஸ்லிம் மக்களின் கல்வியில் கூடிய பங்களிப்பை ஆற்றும் சிற்பங்களையும் சிற்பிகளையும் உருவாக்கிய பெருமை கல்முனை சாகிரா கல்லூரிக்கே உரித்தானது என்றால் மிகையாகாது. இக்கல்லூரியானது பல வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் சட்டத்தரணிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கி நாட்டின் பௌதீக வள, மனித வளத்துறைகளை மேம்படுத்துவதோடு அபிவிருத்தியிலும் கூடிய செல்வாக்குச் செலுத்துகின்றது.
இந்நிலையில், அன்மைக்காலத்தில் இக்கல்லூரியில் உள்ள நிருவாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் மாணவ, ஆசிரயர்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் ஏனைய பழைய மாணவர்கள் புத்தி ஜீவிகளிடத்தில் கவலையோடு உற்றுநோக்க வேண்டியுள்ளது. இவ்விவகாரம் ஓர் பக்க சார்பற்ற முறையில் மாகாண, வலயக்கல்வி அலுவலகங்கள் செயற்படுவதும் அரசியல் தலையீடு இல்லாமல் இக்கல்லூரிக்கான அதிபர் விவகாரத்தை கைய்யாழ்வதும் எமது கல்வித்தாய்க்கு ஆரோக்கியமானதாகும்.
பாடசாலையை சீரமைக்க முழு அதிகாரம் கொண்ட அதிபரின் செயற்பாட்டை வலியுறுத்தும் சோஷியல் வெல்பெயார் போரம், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பாடசாலையின் பௌதீகவளங்களையும் முழுவீச்சில் கண்காணிக்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பையே வேண்டி நிற்கின்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -