!!.இரண்டாக பிளக்கிறது முஸ்லிம் காங்கிரஸ்? மஹிந்த பக்கம் ஹரீஸ், ரணில் பக்கம் ஹக்கீம் என்றால்! றிசாட்டின் நிலை என்ன.?


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
லங்கை முஸ்லிம்களின் தனித்துவ கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல் காலங்களில் இரண்டாக பிளவுபட வாய்ப்பிருப்பதாக பல செய்தித்தளங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் இச்செய்தி எழுதப்படுகின்றது.
அந்த அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அதிதீவிர விசுவாசியாகவும், கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மவடத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கியதேசிய கட்சியில் போட்டியிட்டது குறித்த பெரும்பான்மை கட்சியின் கலகெதர அமைப்பாளராகவும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீம் ஒரு பக்கம் தலைவராகவும், முஸ்லிம் காங்கிரசின் இரண்டாம் நிலை தலைவராக உள்ள எச்.எம்.எம் ஹரீஸ் அடுத்த பிரிவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ பக்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவினை வாழங்க கூடிய அரசியல் கள நிலவரமே முன்னெடுக்கப்படுவதனை பலவகையான செய்திகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
அத்தோடு ஹரிசினுடைய அன்மைக்கால நடவடிக்கைகளும், அவர் தொலைக்காட்சிளில் ஒளிபரப்படும் அரசியல் கலந்துறையாடல்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துக்களும் மேலும் உறுதியாக ஊகித்துக்கொள்ள கூடியதாகவே உள்ளது.
மஹிந்த ராஜபஷ ,முஸ்லிம் காங்கிரஸ் ஹரிஸ் அணி, தேசிய காங்கிரஸ், முஸ்லிம் கூட்டணி (பசீர் சேகுதவூத்-ஹசனலி கூட்டு) உள்ளிட்ட பல முஸ்லிம் பிரமுகர்களை தம் வசம் சேர்த்து அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் அரசியல் தரப்பினால் முடுக்கி விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுளை வென்றெடுக்கும் அரசியல் ரீதியிலான வியூகங்களில் இருந்து முஸ்லிம்கலின் உரிமைகளைகளையும், அரியல் அபிலாசைகளையும் பாதுகாத்து கொள்வதற்கான ஓர் தந்திர உபாயமாகவும் இது இருக்கலாம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு நிறுத்தப்போகும் வேட்பாளருக்கு மேற்சொன்ன முஸ்லிம் பிரதிநிதிகள் ஆதரவளிப்பதோடு, சிங்கள பெரும்பான்மை பலத்துடன் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் அவதானங்கள் ஒரு புறமிருக்க, அரசியல் அவதானிகளின் கருத்துக்களும் குறித்த எதிர்வு கூறல்களை மேலும் ஊர்ஜீதப்படுத்தும் விடயமாகவே அமைந்துள்ளது. இவர்களோடு சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கயஸ்தர்கள் பலரும் மஹிந்த பக்கம் இறுதிக்கட்டத்தில் கைகோர்ப்பபார்கள் என பொதுஜன பெரமுன சூட்சுமமாக கூறியுள்ளதுடன், ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இங்கு முக்கியமக பார்க்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்.! முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாக பிளவுபடுமாயின் அடுத்த முஸ்லிம்களின் ஏகோபித்த பெரும்பான்மை கட்சியாக றிசாட் பதுர்டீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் மத்தியில் பிரபலம் பெறுவதோடு அதிகளவான உறுப்பினர்களையும் பெறும் என உறுதியாக எதிர்வு கூறப்பட கூடிய ஒன்றாகவே உள்ளது.
மறுபக்கத்திலே...றிசாட் பதுர்டீனுடன் பொதுஜன பெரமுன முக்கியஸ்தரான பசில் ராஜபஷவுடன் கொண்டுள்ள உறவின் மூலம் அவரையும் மஹிந்த பக்கம் இறுதியில் இழுக்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டாலும், பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தற்பொழுது விதைக்கப்பட்டுள்ள றிசாட் பதுர்டீனுக்கு எதிரான அரசியல் இனவாத கருத்துகளையும் தாண்டி பெரும்பான்மை சிங்கள வாக்களர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பார்களா.? என்பதே கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், இவ்வாறு இலங்கையினுடைய அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்படுமாயின்.! முஸ்லிம்களை அடையாளப்படுத்தி அதிகூடிய பாராளுமன்ற பிரதி நிதிகளை கொண்ட கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசும், ஏகோபித்த முஸ்லிம்களின் தேசிய அரசியல் தலைமையாக றிசாட் பதுர்டீனும் பெரும் பலத்துடன் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்தியாக வருவதற்கான வாய்ப்பு கை நழுவி போவதில் இருந்து றிசாட் பதுர்டீன் கட்சியை பாதுகாத்து நிலையான அரசியல் தலைமையாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வார் என்பதனை மட்டும் உறுதியாக கூறலாம் என்பது இங்கு சிந்திக்க கூடியதும், எதிர்வு கூறக்கூடிய விடயமாகவும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -