சகவாழ்வு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் சிட்டி பொல காத்தான்குடியில்..

எம்.பஹ்த் ஜுனைட்-லங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அங்காடி வியாபாரிகளுக்கு மத்தியில் சகவாழ்வு, நல்லிணக்கம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையிலான நகர சபை ஏற்பாடு செய்திருந்த "சிட்டி பொல " வாரந்த சந்தை சனிக்கிழமை (20) காத்தான்குடி டாக்டர் அஹமட் பரீட் மாவத்தையில் இடம்பெற்றது.

அனைத்து இன,மத மொத்த, சில்லறை வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் கலந்துகொண்ட சிட்டி பொல ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00 மணிவரை இடம்பெறும்.
சிட்டி பொல ஆரம்ப நிகழ்வில் கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..
கடந்த ஏப்ரல் 21 க்குப் பின்னரான இலங்கையின் அசாதாரண சூழ் நிலையில் இனவாத,மதவாத தீவிர போக்காளர்களினால் முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் விரட்டப்பட்டும் , பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தாலும் காத்தான்குடி நகர சபை மேற்கொண்ட இன,மத,மொழி கடந்த அங்காடி வியாபாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் முன்மாதிரியாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -