வைத்தியர்களுக்குள் நிலவுகின்ற பிரச்சிணைகளுக்கு கிழக்கு மாகாண ஆணையாளரினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டது

பைஷல் இஸ்மாயில் -
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வருகின்ற அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள ஆயர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்குள் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதரினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டது.
ஆலயடிவேம்பு - புளியம்பத்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக திறப்பு விழா நேற்று (10) இடம்பெற்றதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வைத்தியர்கள் பலர் தங்களுக்குள் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை தரும்படி ஆணையாளரிடம் முன்வைத்தனர்.
வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவர்களினால் தீர்வு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -