மினுவங்கொடையில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது..!

னவாத தாக்குதலுக்கு இலக்கான மினுவான்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நகரசபையினால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தல் ஒன்றை அடுத்து அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமை காணப்படுவதாக சகோதர இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
02
குறித்த வர்த்தக நிலையங்களில் ” இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என நகரசபை தலைவரின் உத்தரவின் பேரில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த, மினுவான்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி, மினுவான்கொடை நகர சபை தலைவர் நீல் ஜயசேகரவை தொடர்புகொண்டு குறித்த பேனர்களை அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாம் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் சுத்தம் செய்வதாகவும், நாளைய தினம் பாதிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் எனவும் அப்பிரதேச வர்த்தகர் ஒருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

அதேவேளை நகர சபை தலைவரின் இந்த நாகவடிக்கையால் தமக்கு வர்த்தகம் செய்ய முடியாமல் போகும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.டைலிசிலோன்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -