கல்யாணக்கால் நடுதலுடன் கண்ணகை அம்பாள் வைகாசிச்சடங்கு ஆரம்பம்!



காரைதீவு சகா-

ரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச்சடங்கு

நேற்று(13) திங்கட்கிழமை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடுதலுடன் ஆரம்பமாகியது.

ஆலயத்திலிருந்து நேராக கடலுக்குசென்று கடல்தீர்த்தம் எடுத்துவந்து ஏலவேபார்த்துவைத்த பூவரசுமரக்கிளையை முறித்தெடுத்து ஆலயத்திற்குகொண்டு சென்று கூறைச்சாறிகள் அணிவித்து பின்னர் ஆலயத்தினுள் கல்யாணக்காலாக நட்டனர்.

15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மதியப்பூஜை பகல் 12மணிக்கும் மாலை 5மணிக்கு சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதல் நிகழ்வும் இடம்பெறும்.

20ஆம் திகதி திங்களன்று பிற்பகல் 3மணிக்கு பொங்கலுக்கு நெல் குற்றும் வைபவம் இடம்பெறும். 21ஆம் திகதி அதிகாலை 5மணிக்கு திருக்குளிர்த்hiபாடலுடன் நிறைவடையும்.


எட்டாம்சடங்குப்பூஜை 27ஆம் திகதி திங்களன்று மாலை 5மணிக்கு இடம்பெறும்.அதற்கு முன்னதாக 4 மணிக்கு பொங்கல் பானைகள் ஒப்படைக்கப்படவேண்டும் என ஆலயநிருவாகம் கேட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -