ஹட்டன் மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 15 பேர் கைது.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு ஹட்டனில் பல பிரதேசங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் ஹட்டன் மது வரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் மது வரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜயந்த பெரேரா தெரிவித்தார்.

இன்று (18) காலை மற்றும் நேற்று (17) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3500 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நோர்வூட் மற்றும் குடா ஓயா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், வெசாக் திணைத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும,; மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும, அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை வெசாக் பௌர்ணமி தினத்தினையொட்டி நேற்றும்(17) நேற்றுமுன்தினமும்(16) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடடிவடிக்கையின் போது அதிக விலைக்கு விற்பனை; செய்வதற்காக வைக்கப்படிருந்த சட்ட விரோத அனுமதியற்ற சாரயத்துடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா நீதி மன்றங்களில் ஆஜர் செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் மது வரிதிணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றது.
குறித்த சுற்றிவளைப்புக்களில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக்க பெரேராவின் தலைமையில் மது வரி பரிசோதர்களான டி.பி.ஜயதிலக, டி.ஸ்வீரசிங்க, ஆர்.அபேசேகர, உட்பட எம்.சத்தியசீலன், விஜேபண்டார, குமார, விமுக்திப பக்மீமன உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதே பௌர்ணமி தின சுற்றிவளைப்புக்காக நாடு முழுவதும் 1200 மது வரி திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -