போக்குவரத்தில் பொதிகள் தற்காலிக தடை -ஆலயங்களில் இருந்த விஷேட பூஜைகளும் ரத்து

ஜே.எப்.காமிலா பேகம்- 

ன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில், வெளிநாட்டவர் 9பேர் வரை, உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த அனர்த்தங்களை தொடர்ந்து, தனியார் பஸ்வண்டிகளில் பொதிகள் கொண்டு செல்வதை, தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ,தனியார் பஸ் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைகளிலும் பொதிகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாக ,,ரயில் சேவைஅதிகாரி டிலந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி அமைச்சினால் நாளை 22 மற்றும் நாளை மறுதினம் 23 வரை நாட்டின் சகல பாடசாலைகளும் மூடப்படும்,அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 207 பேர் இறந்துள்ளதாகவும் 500க்கு மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாகவும் அறியப்படுகிறது. 

3 கத்தோலிக்க ஆலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால், இன்று மாலை கத்தோலிக்க ஆலயங்களில், நடைபெற இருந்த பாஸ்கு பூஜைவழிபாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பிஷப் ஹவுஸ் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -