கல்முனையில் நடைபெற்ற மெஸ்ரோ அமைப்பின் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவ செயலமர்வு

அகமட் எஸ். முகைடீன்-முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வு நிறுவனத்தின் (மெஸ்ரோ) ஏற்பாட்டில் 'வலிமையான சமூகத்திற்கு ஆளுமையான இளைஞர்கள்'; எனும் தொனிப்பொருளில் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவ செயலமர்வு கல்முனை இளைஞர்களுக்கு இன்று (23) சனிக்கிழமை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

மெஸ்ரோ அமைப்பின் தலைவரும் பதில் நீதவானுமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பெருந்திரளான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதன்போது இளைஞர்கள் முன்னிலையில் இருப்பதா? முன்மாதிரியாக இருப்பதா? என்னும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளரான பொறியியலாளர் ஏ.எல்.எம். றிசாத், இலங்கையின் சமகால அரசியலும் முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும் என்னும் தலைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும் சிறுபான்மைச் சமூகங்களும் என்னும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறைத் தலைவரும் மெஸ்ரோ அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமான கலாநிதி எம்.எம். பாசில் ஆகியோர் கருத்துரையாற்றினார்;கள்.
காலத்தின் தேவைக்கேற்றதும் இளைஞர் சமூகத்திற்கு பொருத்தமானதுமான தலைப்புகளில் கருத்துரைக்கப்பட்ட இச்செயலமர்வில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. 






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -